நாடு முழுவதும் 12 தொழிற்பூங்காக்கள் அறிவிப்பு!

நிகழாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசித்து வருகிறார்.
மத்திய பட்ஜெட்
மத்திய பட்ஜெட்
Published on
Updated on
1 min read

நாடு முழுவதும் 12 தொழிற்பூங்காக்கள் தொடங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

2024-25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் தொடர்ந்து உரையாற்றி வருகிறார். அவரது உரையில்,

ஊரகப் பகுதிகள் சார்ந்த திட்டங்களுக்கு ரூ.265 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. முத்ரா கடன் வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்
பெண்களுக்கு தங்கும் விடுதிகள் அமைக்கப்படும்: நிதியமைச்சர்

நகரங்கள், கிராமப்புறங்களில் மேலும் ரூ.3 கோடி வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்படும். 5 ஆண்டுகளில் ஒரு கோடி மாணவர்களுக்கு தொழில் பயிற்சி வழங்கப்படும்.

உற்பத்தித் துறையில் உள்ள நிறுவனங்களுக்கு ரூ.100 கோடி கடன் உத்தரவாதம் வழங்கப்படும்.

தொழிலாளர்களுக்காக தங்குமிட வசதி அரசு, தனியார் கூட்டில் உருவாக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com