
பணிபுரியும் பெண்களுக்காக சிறப்பு தங்கும் விடுதிகள் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2024-25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார்.
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் தொடர்ந்து உரையாற்றி வருகிறார். அவரது உரையில்,
பணிபுரியும் பெண்களுக்காக சிறப்பு தங்கும் விடுதிகள் அமைக்கப்படும். புதிதாக பணிகளில் சேரும் இளைஞர்களுக்கு அரசு தரப்பில் ஒரு மாத ஊதியம் வழங்கப்படும்.
நாட்டிலேயே உள்ள கல்வி நிறுவனங்களில் பயில ரூ.10 லட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்படும். மத்திய அரசின் எந்த சலுகைகளும் பெறாத மாணவர்களுக்கு கல்விக் கடனாக ரூ.10 லட்சம் தரப்படும்.
வேளாண் துறையில் டிஜிட்டல் மயம் புகுத்தப்படும். தொழில்துறையுடன் இணைந்து பெண்களுக்கான சிறப்பு தங்கும் விடுதிகள் அமைக்கப்படும். அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.