நாட்டில் விலைவாசி கட்டுக்குள் உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2024-25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார்.
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் தொடர்ந்து உரையாற்றி வருகிறார். அவரது உரையில்,
சர்வதேச பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. நாட்டில் விலைவாசி கட்டுக்குள் உள்ளதாகவும், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் விவசாயிகள் என பட்ஜெட்டில் நான்கு இலக்குகள் மையப்படுத்தி பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், திறன் மேம்பாடு, சிறு, குறு நிறுவனங்கள், நடுத்தர வர்த்தகத்தினர் மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறோம். இளைஞர்கள் நலனுக்காக சிறப்புத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.