மத்திய பட்ஜெட்: முழு விவரம்!!

2024-25ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் செய்திகள் முழு விவரம்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மக்களவையில் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து, சரியாக காலை 11.04 மணிக்கு தனது உரையை தொடங்கிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பகல் 12.28 மணியளவில் நிறைவு செய்தார். சரியாக 84 நிமிடங்கள் அவர் உரையாற்றினார்.

மத்திய பட்ஜெட் சிறப்பம்சங்கள்..

குடியரசுத் தலைவருடன்

நாடாளுமன்றத்தில் இன்று காலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

நாடாளுமன்றம் வருகை!

குடியரசுத் தலைவர் மாளிகையில் திரெளபதி முர்முவை சந்தித்துவிட்டு நாடாளுமன்றத்திற்கு வந்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

பட்ஜெட் செய்திகளை உடனுக்குடன் அறிய..

2024 - 25ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

அமைச்சரவை ஒப்புதல்!

நாடாளுமன்றத்தில் இன்னும் சற்று நேரத்தில், 2024 - 25ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் உரையுடன்..

மக்களவையில் மத்திய பட்ஜெட் தாக்கல்

நடப்பு நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.

விலைவாசி கட்டுக்குள் உள்ளது

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் தொடர்ந்து உரையாற்றி வருகிறார்.

அதில்,

  • நாட்டில் விலைவாசி கட்டுக்குள் உள்ளது.

  • பெண்கள், ஏழைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

  • சர்வதேச பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது.

நாட்டின் வளர்ச்சி

மத்திய அரசின் மீது மக்கள் நம்பிக்கை வைத்து 3ஆவது முறையாக ஆட்சியில் அமர்த்தியுள்ளனர். உலகம் முழுவதும் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. நிச்சயமற்ற தன்மை உள்ளபோதிலும் இந்தியாவின் வளர்ச்சி பிரகாசமாகவே உள்ளது

  • ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளை அடிப்படையாகக் கொண்டு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

  • இந்தியாவின் பணவீக்கம் குறைவாகவே இருந்து வருகிறது.

  • இளைஞர்களுக்காக ஐந்து சிறப்பு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது.

தங்கும் விடுதிகள்

பணிபுரியும் பெண்களுக்கு என ஹாஸ்டல் மற்றும் தங்குமிட வசதிகள் கொண்டுவரப்படும்.

ரூ.10 லட்சம் வரை கல்விக்கடன்

உள்நாட்டு கல்வி நிறுவனங்களில் உயர் கல்வி பயிலும் மாணவர்களின் 10 லட்சம் ரூபாய் வரையிலான கல்விக்கடன் தொகைக்கான வட்டியில் 3 சதவீத மானியம் ஆண்டுதோறும் 1 லட்சம் பேருக்கு வழங்கப்படும்.

மத்திய அரசு சார்பில் தகுதியுள்ள தனி நபர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கல்விக்கடன் வழங்கப்படும். நாட்டில் உயர்கல்வி பயில்வதற்கு எந்தவொரு மாநில அரசின் கல்விக்கடன் திட்டங்களில் தகுதி பெறாத நபர்களுக்கு இந்த கடனுதவி வழங்கப்படும்

வேளாண் துறை

  • மத்திய அரசின் எந்த சலுகைகளையும் பெறாத மாணவர்களுக்கு கல்விக் கடன் ரூ.10 லட்சம் வரை வழங்கப்படும்

  • வேளாண் துறையில் டிஜிட்டல் மயம் புகுத்தப்படும்.

  • டிஜிட்டல் முறையில் காரீஃப் வேளாண் பயிர்கள் தொடர்பாக சர்வே எடுக்கப்படும்.

  • விவசாயத் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

  • இறால் வளர்ப்பு, பதப்படுத்துதல், ஏற்றுமதி ஆகியவற்றுக்கான நிதியுதவி நபார்டு மூலம் எளிதாக்கப்படும்.

பட்ஜெட் விடியோ..

பிகார், ஆந்திரத்துக்கு புதிய திட்டங்கள்

பிகாரில் விமான நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள் அமைக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு.

ஆந்திர வளர்ச்சிக்காக ரூ.15 ஆயிரம் கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு

ஆந்திரப்பிரதேசத்தில் மின்சாரம், சாலை, ரயில்வே உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்படும்.

ஆந்திரத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.

ஆந்திரத்தில் சாலை மேம்பாடு, நீர் திட்டங்களுக்கு கூடுதல் நிதி அளிக்கப்படும்.

ஆந்திர தலைநகர் அமராவதியை உருவாக்க ரூ.15,000 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.

பிகாரில் சாலைகள், மேம்பாலம் அமைக்க 26 ஆயிரம் கோடி வழங்கப்படும்.

தொழில்துறை

  • உற்பத்தி துறையில் உள்ள சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.100 கோடி கடன் உத்தரவாதம் வழங்கப்படும்.

  • சிறு, குறு நிறுவனங்களுக்கு இயந்திரங்கள் வாங்க உத்தரவாதம் இல்லாமல் கடன் வழங்கப்படும்.

  • முத்ரா கடன் வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தித் துறையில் 5 ஆண்டுகளில் 1 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி தரப்படும். இவர்களுக்கு மாதம் ரூ.5,000 உதவித் தொகை தரப்படும்.

12 தொழில் பூங்காக்களுக்கு விரைவில் ஒப்புதல் வழங்கப்படும்.

இந்தியாவின் 500 பெரிய நிறுவனங்களில் தொழில் பயிற்சிக்கான வாய்ப்பு அளிக்கப்படும்.

ஊரகப் பகுதிகள் சார்ந்த திட்டங்களுக்கு ரூ.2.66 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.

புதிதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு மத்திய அரசுத் தரப்பில் ஒரு மாத சம்பளம் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 30 லட்சம் இளைஞர்கள் பயன்பெறுவார்கள்.

பத்திரப்பதிவுக் கட்டணம்

தொழிலாளர்களுக்கு தங்கும் விடுதிகள் அரசு மற்றும் தனியார் கூட்டமைப்பில் உருவாக்கப்படும்.

பிகார் மாநிலம் கயாவிலிருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வரை புதிய பொருளாதார மண்டலம் உருவாக்கப்படும்.

பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் ஒரு கோடி வீடுகள் கட்டப்படும்.

மாநில அரசுகள் பத்திரப்பதிவு கட்டணங்களை குறைக்க வேண்டும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்துறையினருடன் இணைந்து பெண்கள் தங்கும் விடுதிகள் அமைக்கப்படும்.

மக்களவையில்..

வேலை வாய்ப்பு உருவாக்குதல்

வேலைவாய்ப்பு உருவாக்கம், திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படும்.

தொழிற்சாலை ஊழியர்களுக்கு வாடகைக்கு வீடு வழங்கும் திட்டம் அரசு, தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்.

குறு, சிறு நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் மின்னணு வர்த்தக ஏற்றுமதி மையங்கள் ஏற்படுத்தப்படும்.

வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டத்தின் மூலம் 30 லட்சம் இளைஞர்கள் பயன் பெறுவார்கள்.

பிகாருக்கு அதிரடி அறிவிப்பு

  • பிகார் மாநிலத்தில், நீர் பாசனம் மற்றும் வெள்ளத்தடுப்பு திட்டங்களுக்கும் புதிய அறிவிப்புகள் வெளியீடு

  • பிகார் மாநிலத்தில் வெள்ள பாதிப்பைத் தடுக்க ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

  • நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் பாயும் நதிகளால் பிகாரில் அடிக்கடி வெள்ள பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்க திட்டம் கொண்டு வரப்படும்.

  • பிகாரில் உள்ள புராதனமான கோயில்களை மேம்படுத்த திட்டம்.

  • நளந்தா பல்கலையின் மேம்பாட்டுக்கும் சுற்றுலாத் துறையின் மேம்பாட்டுக்கும் கூடுதல் நிதி.

  • அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்த திட்டம்.

  • நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 5 ஆண்டுகளில் ரூ.11.1 லட்சம் கோடி ஒதுக்கீடு.

  • தனியார் நிறுவனங்களுடன் இணைந்து சிறு அணுமின் நிலையங்கள் உருவாக்கப்படும்.

  • காசி விஸ்வநாதர் கோயில், உலகத்தரத்தில மேம்படுத்தப்படும்.

  • பிகார் கயா, புத்தகயா கோயில்கள் மேம்படுத்தப்படும்.

வேளாண்மைக்கு முன்னுரிமை

அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்த திட்டம்.

எண்ணெய் வித்துகள் உற்பத்தி அதிகரிக்கப்படும்.

வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு ரூ.1,52 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

ஊக்கத் தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டுக்கு முன்னுரிமை

ஆந்திரம் மற்றும் பிகார் மாநிலங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுளள்ன.

2024 பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, நடுத்தர மக்களின் நலன் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

திவால் நடைமுறைகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண கூடுதல் தீர்ப்பாயங்கள் அமைக்கப்படும்.

வாராக்கடனை வசூலிப்பதற்கான சீர்திருத்த நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படும்

புற்றுநோய் மருந்துக்கு வரிவிலக்கு

புற்றுநோய் சிகிச்சைக்கு அளிக்கப்படும் மேலும் மூன்று மருந்துகளின் சுங்கவரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

மருத்துவ உபகரணங்கள் மற்றம் சில மருந்துகளுக்கு சுங்க வரி குறைக்கப்படும்.

கேன்சர் நோயாளிகளுக்கு உதவிடும் வகையில் மேலும் அதிக மருந்துகளுக்கு கலால் வரியிலிருந்து முழு விலக்கு அளிக்கப்படும்.

25 அரிய தாதுக்களுக்கும் கலால் வரி விலக்கு அளிக்கப்படும்

தங்கம், வெள்ளி, பிளாட்டினத்துக்கு சுங்க வரி குறைப்பு

தங்கம், வெள்ளி இறக்குமதிக்கான சுங்க வரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகக் குறையும்.

பிளாட்டினத்துக்கான இறக்குமதி வரி 6.4 சதவீதமாக குறைப்பு.

  • ஆன்லைன் வர்த்தகத்துக்கான வரி குறைக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • நேரடி வரி விதிப்பை எளிமைப்படுத்த தொடர்ந்து முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

  • டிடிஎஸ் தாக்கல் தாமதம் இனி கிரிமினல் குற்றமாகக் கருதப்படாது.

அனைத்து வகை முதலீடுகளுக்கான ஏஞ்சல் டாக்ஸ் முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அறக்கட்டளைக்கு ஒரே வரி முறை அறிமுகப்படுத்தப்படும்.

குறிப்பிட்ட சில முதலீடுகளுக்கு 20 சதவீத குறுகிய கால மூலதன ஆதாய வரி.

வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிக் குறைபு. இதுவரை 40 சதவீதமாக இருந்த வரி இனி 34 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.

செல்ஃபோன் விலை குறைகிறது

செல்ஃபோன்களுக்கான் இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்து பட்ஜெட்டில் அறிவித்துள்ளது.

இந்நிலையில், செல்போன், செல்போன்களுக்கான உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரியை 15 சதவீதமாக மத்திய அரசு குறைப்பதாக அறிவித்துள்ளது.

வருமான வரி நிலையான கழிவு ரூ.75,000 ஆக அதிகரிப்பு

தனி நபர் வருமான வரி விதிப்பில் மாற்றமில்லை.

வருமான வரி நிலையான கழிவு ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.75 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏஞ்சல் வரி விதிப்பு முறை முற்றிலும் அகற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வருமான வரி விதிப்பு முறையில் தனி நபர்களுக்கான வருவாயில், ரூ. 3 லட்சம் வரை வரி விதிப்பு இல்லை .

மூன்று லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும்.

ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும்.

ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு 15 சதவீதம் விரி விதிக்கப்படும்.

ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு 20 சதவீதம் வரி விதிக்கப்படும்.

ரூ.15 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டுவோருக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும்.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனங்கள், திரட்டும் மூலதனத்துக்கு விதிக்கப்படுவது ஏஞ்சல் வரி. புதிய நிறுவனங்கள் முதலீட்டாளர்களிடமிருந்து நிதி கோரினால், ஏஞ்சல் வரி விதிப்பு நடைமுறையில் இருந்தது. இது ரத்து செய்யப்படுகிறது.

மொபைல் போன் மற்றும் சார்ஜர்களுக்கு அடிப்படை இறக்குமதி வரிவிகிதம் குறைக்கப்படும் என்று அறிவிப்பு

Summary

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் முதல் முறையாக பதிவு செய்யும் தொழிலாளர்களுக்கு நேரடி பணபரிமாற்ற திட்டத்தின் கீழ் 15,000 ரூபாய் வரையிலான ஒரு மாத சம்பளத் தொகை 3 தவணைகளாக வழங்கப்படும்

25 முக்கிய கனிமங்களுக்கு இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

லித்தியம், காப்பர், கோபால்ட் ஆகியவற்றுக்கு சுங்க வரியிலிருந்து விலக்கு

தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களுக்ககான சுங்க வரி 6 சதவீதமாக குறைப்பு

பாரதப் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், கூடுதலாக 3 கோடி வீடுகள் கட்டுவதற்கான நிதி ஒதுக்கப்படும். மேலும், நமது அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ளபடி பெண்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை மேம்படுத்தும் விதமாக, 3 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தையும், அவர்களுக்கான முக்கியத்துவத்தையும் அதிகரிக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள 63,000 கிராமங்களைச் சேர்ந்த 5 கோடி பழங்குடியின மக்கள் பயன்படக் கூடிய, 'ஜன்ஜாதிய உன்னத் கிராம் அபியான்' என்ற புதிய திட்டம் அறிவிக்கப்படுகிறது.

பொருளாதாரத்தை டிஜிட்டல்மயமாக்க தொழில்நுட்பம் விரைவுபடுத்தப்படும்

தொழிலாளர்துறை சீர்திருத்தங்கள் ஒரு நிறுத்த தீர்வுதளமாக இ-ஷ்ரம் தளம் ஒருங்கிணைக்கப்படும்.

பிரதமரின் வீட்டு வசதி திட்டம், நகர்புறம் 2.0

நகரத்திலுள்ள 1 கோடி ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் பயனடையும் வகையில் 10 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்.

எளிதாக தொழில்புரிய உதவும் ஜன் விஸ்வாஸ் மசோதா 2.0

நாடு முழுவதும் கிராமம், நகரங்களில் உள்ள ஏழைகளுக்கு 3 கோடி வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சூரிய சக்தி திட்டம்

சூரிய சக்தி திட்டத்தின் கீழ் 1 கோடி வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

எரிசக்தி பாதுகாப்பு தொடர்பான கொள்கைகள் விரைவில் உருவாக்கப்படும்.

சூரிய சக்தி பயன்பாட்டை அதிகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நிதியாண்டு 2026-ல் வருவாய் பற்றாக்குறை உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 4.5 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

முத்ரா திட்டம்

முத்ரா திட்டத்தில் கடன் பெற்று அதனை திரும்ப செலுத்தியுள்ள தொழில்முனைவோருக்கு இந்த நிதியாண்டு முதல் ₹20 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும்.

வருமான வரி விகிதங்கள்

3 லட்சம் வரை : இல்லை

3,00,001-7,00,000: 5%

7,00,001-10,00,000: 10%

10,00,001-12,00,000: 15%

12,00,001-15,00,000: 20%

15,00,001 மற்றும் அதற்குமேல்: 30%

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com