ஜம்மு-காஷ்மீா்: பயங்கரவாதி, ராணுவ வீரா் சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் செவ்வாய்க்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவா் சுட்டுக்கொல்லப்பட்டாா். இச்சம்பவத்தில் ராணுவ வீரா் ஒருவா் வீர மரணம் அடைந்தாா்.









