

ராணுவ வாகனம் விபத்து: ஜம்மு - காஷ்மீர் பள்ளத்தாக்கில் ராணுவ வாகனத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 வீரர்கள் வியாழக்கிழமை பலியாகியுள்ளனர்.
டோடா மாவட்டத்தின் பதேர்வா பகுதியில் இன்று பிற்பகலில் 17 ராணுவ வீரர்களுடன் வாகனம் சென்றுகொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
பதேர்வா - சாம்பா செல்லும் சாலையில் கானி டாப் என்ற பகுதியில் 200 அடி பள்ளத்தாக்கில் வாகனம் கவிழ்ந்ததில் 4 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், 13 வீரர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள ராணுவ மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 6 வீரர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பலி எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், காயமடைந்த 7 வீரர்கள் மேல்சிகிச்சைக்காக உதாம்பூர் மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடைபெற்ற இடத்துக்கு ராணுவ அதிகாரிகள் மற்றும் உள்ளூர் அரசு அதிகாரிகள் விரைந்துச் சென்று மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடியரசு தினத்தையொட்டி ஜம்மு - காஷ்மீர் பகுதிகள் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.