மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

மழை குறுக்கீடு: ஜம்மு காஷ்மீர் 527 ரன்கள் குவிப்பு!

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் குறித்து...

Hubballi: Jammu and Kashmir's captain Paras Dogra walks off the field after his dismissal during the second day of the Ranji Trophy 2025-26 final cricket match between Karnataka and Jammu and Kashmir at the KSCA Cricket Stadium, in Hubballi, Karnataka, Wednesday, Feb. 25, 2026. (PTI Photo/Shailendra Bhojak)(PTI02_25_2026_000120B)

அரைசதம் அடித்த ஜம்மு காஷ்மீர் அணியின் கேப்டன். - படம்: பிடிஐ

Published On :

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியின் இரண்டாவது நாள் முடிவில் ஜம்மு காஷ்மீர் அணி 527 ரன்கள் குவித்துள்ளது.

இரண்டாம் நாளான இன்று மாலை 3.50 மணிக்கு போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டு, பின்னர் மழையின் காரணமாக இந்த நாள் ஆட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

ரஞ்சி கோப்பைக்கு இறுதிக்கு 67 ஆண்டுகளில் முதல்முறையாக வந்திருக்கும் ஜம்மு காஷ்மீர் அணி கர்நாடகத்துக்கு எதிராக டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

முதல் நாளில் 284/2 ரன்கள் குவித்தது. சதமடித்த சுபம் பண்டிர் 121 ரன்களுக்கு இரண்டாம் நாளில் ஆட்டமிழந்தார்.

பராஸ் டோக்ரா 70, கன்ஹையா வாத்வான் 70 மற்றும் அப்துல் சமாத் 61 ரன்கள் எடுத்து அணிக்கு பலம் சேர்த்தார்கள்.

தற்போது, களத்தில் சாஹில் லோத்ரா 57, அபித் முஷ்டக் 20 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்கிறார்கள்.

கர்நாடக அணி சார்பில் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

Summary

Rain interruption: Jammu and Kashmir accumulates 527 runs in Rajni Triphy Final second day

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.