கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்கரூர் நிகழ்வில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு! கரூர் பலி: தற்காலிக அரசுப் பணி ஆணையே வழங்க வேண்டும்! மதுரை அமர்வு உத்தரவுஇதயம் முரளி வெளியீட்டுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!கரூர் பலி: அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது? - நீதிபதிகள்திருச்சியில் இருந்து கரூர் செல்லும் முதல்வர் ஜோசப் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு! இன்றைய நிலவரம்அதிபர் டிரம்ப்பை கொல்ல ஈரான் சதி! இஸ்ரேலின் உளவுத் தகவலால் பரபரப்பு!
/

33 வெளிநாட்டினர் உள்பட 8,796 பக்தர்கள் அடங்கிய 9-வது குழு அமர்நாத் புறப்பட்டது!

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் நடைபெறும் வருடாந்திர அமர்நாத் யாத்திரை பற்றி..

News image
Updated On :10 ஜூலை 2026, 12:38 pm IST

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் நடைபெறும் வருடாந்திர அமர்நாத் யாத்திரைக்காக 33 வெளிநாட்டினர் உள்பட 8,796 பக்தர்களைக் கொண்ட ஒன்பதாவது குழு பகவதி நகர் முகாமிலிருந்து புறப்பட்டனர்.

ஜூலை 2 ஆம் தேதி யாத்திரை தொடங்கியதிலிருந்து 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள குகைக் கோயிலில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை இதுவரை 1.73 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

வெள்ளிக்கிழமையான இன்று ஒன்பதாவது குழுவில் 6,046 ஆண்கள், 2,042 பெண்கள், 228 சாத்விக்கள், 10 குழந்தைகள், ஒரு திருநங்கை மற்றும் 33 வெளிநாட்டினர் உள்பட மொத்தம் 8,796 பக்தர்கள் 354 வாகனங்களில் புறப்பட்டனர்.

அதிகாரிகளின் தகவலின்படி, வாகன அணிவகுப்பு இரண்டு தனித்தனி குழுக்களாகப் புறப்பட்டது. பால்டால் வழித்தடத்தில் 3,450 பக்தர்களுடன் அதிகாலை 3.35 மணிக்கும், பஹல்காம் வழித்தடத்தில் 5,346 பக்தர்களுடன் மற்றொரு குழு அதிகாலை 4 மணிக்கும் பம் பம் போலே, ஹர ஹர மகாதேவ் மற்றும் பர்ஃபானி பாபா கி ஜெய் ஆகிய முழக்கங்களுக்கு மத்தியில் புறப்பட்டன.

இன்று புறப்பட்டவர்களையும் சேர்த்து, மொத்தம் தொடங்கியதிலிருந்து இதுவரை ஜம்மு முகாமிலிருந்து 61,612 பக்தர்கள் சென்றுள்ளனர்.

57 நாள்கள் நடைபெறும் இந்த அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 28-ஆம் தேதியுடன் நிறைவடைகின்றது.

A ninth batch of 8,796 pilgrims, including 33 foreigners, left the Bhagwati Nagar base camp here on Wednesday for the annual Amarnath Yatra in Jammu and Kashmir's Anantnag district amid multi-tier security, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.