ஆந்திரத்தை நோக்கி நகரும் 'அக்வான்' புயல்: வானிலை ஆய்வு மையம் தகவல்திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும்: அண்ணாமலை சோனியா காந்தியின் சுயசரிதை: ஹாரி பாட்டர் புத்தகத்துக்கு இணையான வரவேற்பு! சென்னைக்கு நவ. 18, 19 ஆம் தேதிகளில் மிக கனமழை எச்சரிக்கை!மேகேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் மேலிடத்திற்கு முதல்வர் விஜய் அழுத்தம் கொடுக்க இபிஎஸ் வலியுறுத்தல்!

நீட் தேர்வை ரத்து செய்து மீண்டும் பழைய முறையைக் கொண்டுவர வேண்டும்: மாயாவதி

நீட் தேர்வின் விளைவு எதுவாக இருந்தாலும் லட்சக்கணக்கான மாணவர்கள் வலியும் மன வேதனையும் அடைவார்கள்

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி

Updated On :

தேசிய நுழைவுத் தேர்வை ரத்து செய்து மருத்துவ சேர்க்கைக்கான "பழைய முறையை" மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் பாஜக தலைமையிலான மத்திய அரசையும் கடுமையாகச் சாடி வருகின்றனர். இது தீவிர பிரச்னையாக மாறி நாடாளுமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வருகின்றது.

இதுதொடர்பான அவரின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,

நீட் தேர்வின் விளைவு எதுவாக இருந்தாலும் லட்சக்கணக்கான மாணவர்கள் வலியும் மன வேதனையும் அடைவார்கள் என்பது மட்டும் நிச்சயம். இதுபோன்ற முக்கியமான தேர்வை முறையாக நடத்த முடியும் என்று மக்களுக்கு உறுதியளிக்க மத்திய அரசு தவறிவிட்டது, இது பிரச்னையை மேலும் தீவிரமாக்கியிருக்கிறது.

பல மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று, ஏன் மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வை மீண்டும் பழைய முறையை நடைமுறைப்படுத்தக்கூடாது என்று அவர் இந்தியில் பதிவிட்டுள்ளார்.

தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய கல்வி அமைச்சகம் நடத்தும் மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் போன்ற படிப்புகளுக்கான சேர்க்கையின் நுழைவுத்தேர்வில் பெரிய அளவிலான முறைகேடுகள் நடைபெற்றதாகவும், வினாத்தாள் கசிவு, ஆள்மாறட்டம் உள்ளிட்ட தொடர் சர்ச்சை நிலவி வருகின்றது. மேலும் நீட் இளநிலை மறுதேர்வு குறித்த மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.