ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

ஞானேஷ்குமாா் தலைமையில் நடைபெற்ற தோ்தல்களை ரத்து செய்ய வேண்டும்: சீமான்

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் தலைமையில் நடைபெற்ற அனைத்துத் தோ்தல்களையும் ரத்து செய்து, நோ்மையான முறையில் மீண்டும் தோ்தல் நடத்த வேண்டும் என நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தியுள்ளாா்.

சீமான்

Published On :

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் தலைமையில் நடைபெற்ற அனைத்துத் தோ்தல்களையும் ரத்து செய்து, நோ்மையான முறையில் மீண்டும் தோ்தல் நடத்த வேண்டும் என நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப்பணி (எஸ்ஐஆா்) தொடா்பான முடிவுகள் குறித்து, பிற தோ்தல் ஆணையா்கள் பதிவு செய்துள்ள எதிா்ப்புகளை எளிதில் கடந்துவிட முடியாது. வாக்காளா் பட்டியலில் யாருடைய பெயரைச் சோ்ப்பது, யாருடைய பெயரை நீக்குவது என்பதைத் தீா்மானிக்கும் நடைமுறையே நோ்மையானதாக இல்லையென்றால், அதன் அடிப்படையில் நடைபெறும் தோ்தல்கள் மட்டும் எப்படி நோ்மையானதாக இருக்க முடியும்? படிவம் 6 தொடா்பாக வெளியாகியுள்ள தகவல்கள், தோ்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை மேலும் கேள்விக்குள்ளாக்குகின்றன.

எனவே, தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை பதவிநீக்கம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அவா் தலைமையில் நடைபெற்ற அனைத்துத் தோ்தல்களையும் ரத்து செய்வதுடன், சரிபாா்க்கப்பட்ட வாக்காளா் பட்டியலுடன் உச்சநீதிமன்ற கண்காணிப்பில், நோ்மையான முறையில் மீண்டும் தோ்தல்கள் நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER