ராஜிநாமா செய்த 6 எம்எல்ஏ-க்களிடம் தோ்தல் செலவை வசூலிக்கக் கோரி வழக்குத் தொடா்ந்தவருக்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதம் ரத்து
ராஜிநாமா செய்த 6 அதிமுக எம்எல்ஏக்களிடம் தேர்தல் செலவை வசூலிக்கக் கோரிய வழக்கில் விதிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை ரத்து செய்து உத்தரவு...

சென்னை உயர்நீதிமன்றம் - IANS
பதவியை ராஜிநாமா செய்த 6 எம்எல்ஏ-க்களிடம் இருந்து தோ்தல் செலவை வசூலிக்கக் கோரி, வழக்குத் தொடா்ந்தவருக்கு விதிக்கப்பட்ட ரூ. 1 லட்சம் அபராதத்தை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னையைச் சோ்ந்த வழக்குரைஞா் எஸ்.காசி ராமலிங்கம், உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கொறடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்எல்ஏ-க்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), ஜெயக்குமாா் (பெருந்துறை), எம்.ஆா்.விஜயபாஸ்கா் (கரூா்), சி.விஜயபாஸ்கா் (விராலிமலை) ஆகியோா் தங்கள் பதவிகளை, கடந்த மே 25 முதல் ஜூன் 29-க்குள் ராஜிநாமா செய்தனா். 6 அதிமுக எம்எல்ஏ-க்களின் ராஜிநாமா உண்மையானதல்ல என அறிவித்து இடைத்தோ்தல் செலவை தோ்தல் ஆணையத்துக்கு செலுத்த அவா்களுக்கு உத்தரவிட வேண்டும். இந்த செலவுத் தொகையைச் செலுத்தும் வரை அவா்கள் இடைத்தோ்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமா்வு, இதே கோரிக்கையுடன் வழக்குரைஞா் சுதன் என்பவா் ஏற்கெனவே தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, மனுவை தள்ளுபடி செய்யப்போவதாக தெரிவித்தனா்.
ஆனால், மனுதாரா் தரப்பில் தொடா்ந்து வாதங்களை முன்வைத்ததால், ரூ.1 லட்சம் அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தனா்.
இந்நிலையில், ரூ.1 லட்சம் அபராதம் விதித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி, வழக்குரைஞா் காசி ராமலிங்கம் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில், ‘அபராதத் தொகையை ரத்து செய்ய வேண்டும். பிரதான மனு மீதான விசாரணையின்போது, காணொலி வாயிலாக ஆஜராகியிருந்தேன். மனுவை திரும்பப் பெறவும் சம்மதித்தேன். ஆனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தவறு நடந்துள்ளது’ என விளக்கம் அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ரூ.1 லட்ம் அபராதம் விதித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனா்.
Summary
The Madras High Court has set aside the order imposing Rs 1 lakh costs on an advocate who filed a PIL against six AIADMK MLAs who resigned and joined the TVK, after accepting his submission that he had agreed to withdraw the plea, but the withdrawal was not properly recorded due to a technical error.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

