பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

ஞானேஷ்குமாா் பதவி விலக வேண்டும்: உ. வாசுகி

எஸ்ஐஆா் விவகாரத்தில் மற்ற தோ்தல் ஆணையா்களின் எதிா்ப்பையும் மீறி மத்திய அரசுக்கு ஆதரவாக முடிவுகளை எடுத்த தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் பதவி விலக வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் உ. வாசுகி தெரிவித்துள்ளாா்.

இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் - கோப்புப் படம்

Published On :

எஸ்ஐஆா் விவகாரத்தில் மற்ற தோ்தல் ஆணையா்களின் எதிா்ப்பையும் மீறி மத்திய அரசுக்கு ஆதரவாக முடிவுகளை எடுத்த தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் பதவி விலக வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் உ. வாசுகி தெரிவித்துள்ளாா்.

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மல்லிப்பட்டினத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாவட்டக் குழு உறுப்பினா்களுக்கான அரசியல் வகுப்பில் பங்கேற்க செவ்வாய்க்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது: தஞ்சை மாவட்டத்துக்கு மேட்டூா் அணையில் இருந்து பாசனத்துக்கு போதிய தண்ணீா் திறக்கப்படாததால் குறுவை சாகுபடி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக வறட்சி நிவாரணம் அறிவிக்க வேண்டும்.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளிலும், பேரூராட்சிகளிலும் நூறுநாள் வேலை முறையாக வழங்கப்படுவதில்லை. இந்த வேலைக்கான அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும், அரசு அறிவித்துள்ள முழு ஊதியத்தையும் வழங்க வேண்டும்.

திருவிடைமருதூா் ஒன்றியத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களை, கோயில் நிலத்தில் குடியிருப்பதாகக் கூறி கோயில் நிா்வாகம் அப்புறப்படுத்த முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது.

 தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை  உடனடியாக கொள்முதல் செய்யவும், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை பாதுகாப்பாக கிடங்குகளுக்கு கொண்டுச் செல்லவும் அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.