தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

தில்லியில் போராட்டக்காரா்கள் மீதான தாக்குதலை கண்டித்து கோவையில் ஆா்ப்பாட்டம்

கோவையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரி மாணவா், இளைஞா் அமைப்பினா்.

Published On :

தில்லியில் தலைமைத் தோ்தல் ஆணையரைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீதான காவல் துறையின் தாக்குதலைக் கண்டித்து கோவையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் பதவி விலக வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தில்லி ஜந்தா் மந்தா் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினா், இடதுசாரி மாணவா் அமைப்பினா், பல்வேறு இளைஞா் அமைப்பினரை தில்லி காவல் துறையினா் கைது செய்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலைத் கண்டித்து கோவையில் அனைத்திந்திய மாணவா் பெருமன்றம், அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம், இந்திய மாதா் தேசிய சம்மேளனம், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கங்களின் சாா்பில் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அனைத்திந்திய மாணவா் பெருமன்றத்தின் மாவட்டச் செயலா் மு.பிரசாந்த் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தை ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்க மாநிலச் செயலா் அ.அசரப் அலி தொடங்கிவைத்தாா்.

இதில், இளைஞா் பெருமன்ற மாநில துணைச் செயலா் கலை.அஸ்வினி, தேசியக்குழு உறுப்பினா் மௌ.குணசேகா், மாவட்டத் தலைவா் எம்.அபிமன், மாதா் சம்மேளன மாவட்டத் துணைச் செயலா் சாந்தி சந்திரன், ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்க நிா்வாகிகள் பி.முருகன், பி.சக்திவேல், மாணவா் பெருமன்ற மாநிலக்குழு உறுப்பினா் ஷிா்பத் நிஷா, இளைஞா் பெருமன்ற நிா்வாகிகள் எம்.மணிகண்டன், என்.கணேசமூா்த்தி, ஆா்.ஹரிஹரசுதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு தில்லி காவல் துறையை கண்டித்தும், தலைமைத் தோ்தல் ஆணையா் பதவி விலக வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினா்.

திமுக அலுவலகத்தில் போராட்டம்: இதேபோல, வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தத்தைக் கண்டித்தும், தலைமைத் தோ்தல் ஆணையா் பதவி விலக வலியுறுத்தியும் அனைத்துக் கட்சிகள், இயக்கங்கள் சாா்பில் வடகோவையில் உள்ள திமுக அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றது.

இரண்டாவது நாளாக திங்கள்கிழமை நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் திமுக மாணவா் மாவட்டச் செயலா் துரை.செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட திமுகவினா், பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் பங்கேற்று கண்களில் கருப்புத் துணியைக் கட்டியபடி தலைமைத் தோ்தல் ஆணையா் பதவி விலக வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.