
நவி மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகினர்.
மகாராஷ்டிர மாநிலம், நவி மும்பையின் சிபிடி பேலாப்பூர் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 4:50 மணியளவில் நான்கு மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. நிகழ்விடத்துக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினரும்நகராட்சி தீயணைப்புப் படையினரும் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
நண்பகலில், ஒருவரின் உடல் மீட்கப்பட்டது, அதைத் தொடர்ந்து மேலும் இரண்டு உடல்கள் பின்னர் நாளில் கண்டுபிடிக்கப்பட்டன. காயமடைந்த இருவர் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். மீதமுள்ள நபர்களைத் தேடும் பணிகள் தொடர்வதாக நவி மும்பை மாநகராட்சி ஆணையர் கைலாஷ் ஷிண்டே தெரிவித்தார்.
அதிர்ஷ்டவசமாக, அதிகாலை நேரத்தில் கட்டடத்தில் விரிசல்கள் கண்டறியப்பட்டதையடுத்து, 52 குடியிருப்பாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இடிந்து விழுந்த கட்டடம் சுமார் 10 ஆண்டுகள் பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.