காந்தி ஜெயந்தி, வார இறுதி விடுமுறை: 5,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்மதுரை உள்பட 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புநிறுவன வரி கணக்கு தாக்கல் செய்ய 3 வார அவகாசம் நீட்டிப்புதனியாா் பேருந்துகள் நாளை வேலைநிறுத்தம்

ஹரியாணா: கால்நடை தாக்கியதில் பெண் பலி

ஹரியாணாவில் தெரு மாடு தாக்கியதில் 65 வயது பெண் ஒருவர் சனிக்கிழமை பலியானார்.

(கோப்புப்படம்).

Published On :

ஹரியாணாவில் தெரு மாடு தாக்கியதில் 65 வயது பெண் ஒருவர் சனிக்கிழமை பலியானார்.

ஹரியாணா மாநிலம், படேல் நகரில் குர்ப்ரீத் கவுர்(65) தனது வீட்டின் நுழைவாயில் பகுதியை இன்று தூய்மைபடுத்திக்கொண்டு இருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த மாடு ஒன்று அவரை திடீரென தாக்கியது.

அதில் கவுர் விழுந்த பிறகும் அந்த மாடு அவரைத் தாக்கிக் கொண்டே இருந்தது. இருப்பினும் அருகிலிருந்த சிலர் அந்த மாட்டை விரட்ட முயன்றுள்ளனர்.

பின்னர் காயமடைந்த அந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பலியானார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.