
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் "அக்னிபத்" திட்டம் ரத்து செய்யப்படும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் சனிக்கிழமை தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தின்போது சமாஜ்வாதி கட்சியில் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் குறுகிய கால ராணுவ ஆள்சேர்ப்பு திட்டத்தை ரத்து செய்வதாக யாவத் பலமுறை வாக்குறுதி அளித்திருந்தார்.
இதுதொடர்பாக அவருடைய எக்ஸ் பதிவில், நாட்டின் பாதுகாப்பை சமரசம் செய்து அக்னி வீரர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் குறுகிற கால அக்னிவீர் ராணுவ ஆள்சேர்ப்பு திட்டத்தை நாங்கள் ஆட்சிக்கு வந்த 24 மணி நேரத்தில் ரத்து செய்யப்படும். அதேபோன்று பழைய ஆள்சேர்ப்பு முறையைத் திரும்பக்கொண்டு வரப்படும் என்று இந்தியில் பதிவிட்டுள்ளார்.
காவல்துறை மற்றும் மாகாண ஆயுதக் காவலர் ஆள்சேர்ப்புக்காக பணியில் இருந்து திரும்பிய அக்னி வீரர்களுக்கு உத்தரப் பிரதேச அரசு கூடுதல் அங்கீகாரம் வழங்கும் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.