தங்கம் விலை (கோப்புப்படம்)
தங்கம் விலை (கோப்புப்படம்)

தங்கம் இன்று என்ன விலை?

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரத்தைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்..
Published on

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைவிட இன்று சற்று உயர்ந்துள்ளது.

மத்திய நிதிநிலை அறிக்கையில் தங்கத்துக்கான சுங்க வரி குறைக்கப்பட்டதால் அதன் விலை தொடா்ந்து குறைந்து வந்தது. சென்னையில் ஜூலை 17-ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 55,360 வரை உயா்ந்து புதிய உச்சத்தை தொட்டது.

தங்கம் விலை (கோப்புப்படம்)
பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு: பாஜக அரசை கண்டித்து திமுகவினர் போராட்டம்

இந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி சற்று உயர்ந்துள்ளது. அதன்படி சவரன் ரூ. 51,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 50 அதிகரித்து ரூ.6,465-க்கும், சவரனுக்கு ரூ. 400-ம் அதிகரித்துள்ளது.

நிதிநிலை அறிக்கையின் எதிரொலியாக 4 நாள்களில் ரூ.3,160 குறைந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது.

தங்கம் விலை (கோப்புப்படம்)
மேட்டூர் அணை: 100 அடியை நெருங்கும் நீர்மட்டம்!

ஆனால், வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ. 89-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ. 89,000-க்கும் விற்பனையாகிறது. தொடர்ந்து வெள்ளி மூன்றாவது நாளாக ஒரே விலையில் நீட்டிக்கிறது.

மத்திய நிதிநிலை அறிக்கையில் சுங்கவரி குறைக்கப்பட்டுள்ளதால், மேலும் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதாக விற்பனையாளர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com