பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு: பாஜக அரசை கண்டித்து திமுகவினர் போராட்டம்

மத்திய நிதிநிலை அறிக்கை 2024 இல் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டி, மத்திய பாஜக அரசுக்கு எதிராக திமுக சார்பில் சனிக்கிழமை தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில், மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் பங்கேற்று மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.
சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில், மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் பங்கேற்று மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.
Published on
Updated on
2 min read

சென்னை: மத்திய நிதிநிலை அறிக்கை 2024 இல் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டி, மத்திய பாஜக அரசுக்கு எதிராக திமுக சார்பில் சனிக்கிழமை தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

நிகழ் நிதியாண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை, ஒட்டுமொத்த இந்தியாவுக்கானதாகத் தெரியவில்லை. மாறாக, தங்கள் ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக சில மாநிலங்களுக்கு மட்டும் நிதியை தாராளமாக அள்ளிக் கொடுத்தும், நாட்டின் வளா்ச்சியில் பெரும் பங்கு வகித்துவரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தைக் கக்கிடும் வகையில் அமைந்திருக்கிறது.

மத்திய நிதிநிலை அறிக்கையில், மாற்றாந்தாய் போக்குடன் தமிழ்நாட்டை வஞ்சித்த மத்திய பாஜக அரசைக் கண்டித்து, திமுக சாா்பில் வரும் சனிக்கிழமை (ஜூலை 27) அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் காலை 10 மணிக்கு ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில், மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் பங்கேற்று மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.
பெருந்தன்மை இல்லாத ஒன்றிய பாஜக அரசு! முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

இந்த நிலையில், மத்திய நிதிநிலை அறிக்கையில், மாற்றாந்தாய் போக்குடன் தமிழ்நாட்டை வஞ்சித்த மத்திய பாஜக அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் சனிக்கிழமை திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தில், கட்சி நிா்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலரும் பங்கேற்றுள்ளனர்.

சென்னையில் இரண்டு இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில், மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கப்பாண்டியன், கலாநிதி வீராசாமி மற்றும் வில்சன் உள்ளிட்டோர் பங்கேற்று மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 9 ஆவது நீதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்திற்கு முன்னதாக இந்த எதிர்ப்பு வந்துள்ளது.

முன்னதாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய நிதிநிலை அறிக்கை தொடர்பாக பாஜக அரசை தாக்கி, பாஜகவை புறக்கணித்த மாநிலங்கள் மற்றும் மக்களுக்கு எதிரான "பழிவாங்கும் செயல்" போல் நிதிநிலை அறிக்கை உள்ளது என்று கூறினார்.

சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில், மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் பங்கேற்று மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.
மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்தது!

"வணக்கம்! இந்நேரம் தில்லியில் நடைபெறும், பிரதமர் தலைமையிலான ‘நிதி ஆயோக்’ கூட்டத்தில் பங்கெடுத்திருக்க வேண்டிய நான் – மத்திய பாஜக அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்ட நிதிநிலை அறிக்கையால், நீதி கேட்டு, மக்கள் மன்றமான உங்கள் முன் பேச வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன். தமிழ்நாட்டில் நடைபெறும் உங்களின் திராவிட மாடல் அரசு, கடந்த மூன்றாண்டு காலமாக எத்தகைய முற்போக்கு மற்றும் தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டு வருகிறதென்று, உங்கள் எல்லோருக்குமே நன்கு தெரியும்.

நமது அரசின் திட்டங்களின் பயன்கள், ஒவ்வொரு குடும்பத்துக்கும் – ஒவ்வொரு குடிமகனுக்கும் நேரடியாகக் கிடைக்கிறது. அதனால்தான், திமுகவுக்கு வெற்றி மேல் வெற்றி குவிகிறது. “நாள்தோறும் திட்டங்கள். மக்கள் மனந்தோறும் மகிழ்ச்சி!” இதுதான் நமது அரசின் எண்ணம்.

இப்படிப்பட்ட நமது எண்ணங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களை மத்திய அரசு தொடர்ந்து செய்துகொண்டு வருகிறது. ஒரு அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான இலக்கணத்தை – நான் அடிக்கடி சொல்லிக்கொண்டு வருகின்றேன். ஒரு நல்ல அரசு என்பது வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்ல – வாக்களிக்க மறந்த மக்களுக்கும் சேர்ந்தே பாடுபட வேண்டும்.

இப்படித்தான் தமிழ்நாடு அரசு பணியாற்றிக் கொண்டு இருக்கிறது. ஏன், மோடி தலைமையிலான பாஜக அரசு வருவதற்கு முன்பு இருந்த எல்லா மத்திய அரசுகளும்கூட அப்படித்தான் இருந்தன. ஆனால், இந்தப் பெருந்தன்மை மத்திய பாஜக அரசிடம் இல்லை. இவர்கள் மட்டும்தான் அரசியல் நோக்கத்துடன் அரசை நடத்துகிறார்கள் என கூறினார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் போது, ​​செவ்வாய்க்கிழமை பிகார் மற்றும் ஆந்திரம் மாநிலங்களுக்கு உள்கட்டமைப்பை மேம்படுத்துவது உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

வியாழக்கிழமை, நீதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் முதலில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து, ஹிமாச்சலப் பிரதேசத்தின் சுக்விந்தர் சிங் சுகு, கர்நாடக முதல்வர் சித்தராமையா, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட அதன் முதல்வர்களும் கூட்டத்தைப் புறக்கணிப்பார்கள் என்று காங்கிரஸ் கூறியது.

2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக்கும் இலக்கை எட்டுவதில் மாநிலங்களின் பங்கு குறித்து நீதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. மேலும், வளர்ந்த பாரதம்-2024 தொலைநோக்கு பார்வைக்கான அணுமுறை ஆவணம் மீது ஆலோசனை நடைபெறவுள்ளது.

கூட்டமானது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான நிர்வாக ஒத்துழைப்பை மேம்படுத்துவதோடு, அரசு வினியோக வழிமுறைகளை வலுப்படுத்தி, கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே கூட்டத்தின் நோக்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com