சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைவது எப்படி? வங்க தேச யூடியூபர் விடியோவால் சர்ச்சை

இந்திய எல்லை பாதுகாப்பு படை வலுப்படுத்தப்பட வேண்டும் என சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு
சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைவது எப்படி? வங்க தேச யூடியூபர் விடியோவால் சர்ச்சை
Published on
Updated on
1 min read

இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைவது குறித்து வங்க தேச யூடியூபர் விடியோ வெளியிட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

வங்க தேசத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஒருவர் இந்தியாவுக்குள் எப்படி அத்துமீறி, சட்டவிரோதமாக நுழைய முடியும் என்பதை விளக்கும் விடியோ ஒன்றை டி.ஹெச். டிராவலிங் இன்ஃபோ யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

தற்போது அந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, வங்க தேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் நுழைய மக்களுக்கு எந்த ஆவணங்களும், விசாவும் அல்லது பாஸ்போர்ட்டும் தேவையில்லை என்று விடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடியோவில் யூடியூபர், வங்க தேசத்தின் சுனம்கஞ்ச் மாவட்டத்தில் நின்று, இந்தியாவுக்குச் செல்லும் ஒரு பாதையை சுட்டிக்காட்டிய அவர், இந்த பாதையில் செல்வோர் எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகளிடம் மாட்டிக் கொள்வது போன்ற விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று குறிப்பிடுகிறார்.

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைவது எப்படி? வங்க தேச யூடியூபர் விடியோவால் சர்ச்சை
தில்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் 3 மாணவர்கள் பலி: மாணவர்கள் போராட்டம்

மேலும் சட்டவிரோதமாக நுழைவதற்கு, சில சுரங்கப் பாதைகளைக் காட்டுகிறார். இருப்பினும், சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைய வேண்டாம் என்றும் வங்க தேசத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் என்றும் பார்வையாளர்களை எச்சரித்து விடியோவை முடிக்கிறார்.

பழைய விடியோவான இது, சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது; அதாவது, இதுவரையில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளையும், 7000-க்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது.

இந்த விடியோவினைப் பார்த்த பலரும் இந்தியாவின் பாதுகாப்பு நிலைமை குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர்.

இந்த விடியோ குறித்து இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர், "எல்லைப் பாதுகாப்புப் படை தூங்குகிறதா? ஒரு யூடியூபருக்கு வழி தெரிந்தால், அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. எல்லைப் பாதுகாப்புப் படை இவ்வளவு காலம் என்ன செய்து கொண்டிருக்கிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைவது எப்படி? வங்க தேச யூடியூபர் விடியோவால் சர்ச்சை
டிரம்ப் தான் அடுத்த அதிபர்: பிரபல ஜோதிடர் எமி ட்ரிப்

மேலும், ஒரு பயனர் "அவர்களுக்கு விசாக்கள் அல்லது பாஸ்போர்ட் தேவையில்லை. அவர்கள் சுரங்கப் பாதையைக் கடந்தவுடன், பான் அட்டைகள் மற்றும் ஆதார் அட்டைகள் விற்கப்படுகின்றன"என்று கூறினார்.

மற்றொரு பயனர், "அவர் விடியோ வெளியிட்டது நல்லது; இப்போது நாம் பாதுகாப்பினை வலுப்படுத்த முடியும்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் இந்தியா - வங்க தேச எல்லையில் கண்காணிப்பு மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளின் அவசியத்தை உரைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com