

ஹரியாணாவில் கௌரவ் சரண் என்பவர் மோசடியில் இருந்து தப்பித்தது குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஹரியாணாவின் குர்கான் மாவட்டத்தில் பிரபல தனியார் வங்கியின் அதிகாரி என்று கூறி அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர், கௌரவ் சரண் என்பவரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அந்த குறுஞ்செய்தியில், கௌரவின் வங்கிக்கணக்கில் பான் எண்ணை இணைப்பதற்காக லிங்க் அனுப்பியுள்ளார்.
ஆனால், குறுஞ்செய்தியை அனுப்பியவர் மோசடி செய்பவர் தான் என்பதை கௌரவ் அறிந்துவிட்டார்.
இதனையடுத்து, கௌரவ் ``நீங்கள் ஒரு மோசடி செய்பவர் என்பது எனக்கு தெரியும். நான் ஒரு மென்பொருள் பொறியாளர்; நீங்கள் விரும்பினால் நீங்கள் மோசடி செய்ய அனுப்பும் வலைப்பக்கத்தை, வங்கியின் உண்மையான பக்கத்தைப் போல வடிவமைத்து தருகிறேன்” என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மோசடிக்காரரும் ``உண்மையாகவா?” என்று பதிலளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ``ரூ.20,000 தந்தால், வலைதளத்தை உருவாக்கித் தருகிறேன்” என்றும் கூறியுள்ளார் கௌரவ்.
இந்த உரையாடலை ஸ்கிரீன்சாட் எடுத்து, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மோசடிக்காரரிடம் பணம் பெற்றீர்களா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து இணையவாசிகள் பலரும் கேலியான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.