
மகாபாரத சக்கர வியூகத்தை போன்று 21-ஆம் நூற்றாண்டின் சக்கர வியூகத்தை 6 பேர் கட்டுப்படுத்துவதாக மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
மக்களவையில் மத்திய பட்ஜெட் மீது நடைபெறும் விவாதத்தில் கலந்து கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை உரையாற்றினார்.
அப்போது, மகாபாரதத்தையும் பாஜக அரசையும் ஒப்பிட்டு ராகுல் காந்தி பேசியதாவது:
“மகாபாரதத்தில் அபிமன்யூவை சிக்க வைப்பதற்கு சக்கர வியூகம் உருவாக்கப்பட்டு அவர் கொல்லப்படுவார், நான் இதுகுறித்து சிறிது தேடுதலில் ஈடுபட்டேன். சக்கர வீயூகத்துக்கு மற்றொரு பெயர் பத்ம வியூகம். பத்ம வியூகம் என்றால் தாமரை வியூகம்.
21ஆம் நூற்றாண்டில் புதிதாக சக்கர வியூகம் உருவாக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, அந்த சின்னத்தை நெஞ்சில் தாங்கியுள்ளார். அபிமன்யூ இடத்தில் இந்தியாவின் இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், சிறுகுறு தொழில்கள் உள்ளனர்.
அன்று துரோணர், அஸ்வத்தாமன் உள்பட 6 பேர் சக்கர வியூகத்தை கட்டுப்படுத்தியது போன்று இன்றும் 6 பேர் கட்டுப்படுத்துகின்றனர். மோடி, அமித் ஷா, மோகன் பகவத், அஜித் தோவல், அம்பானி மற்றும் அதானி ஆகியோர்தான்” எனத் தெரிவித்தார்.
அப்போது மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா குறிக்கிட்டதை தொடர்ந்து, நீங்கள் விரும்பினால், பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அம்பானி மற்றும் அதானி பெயர்களை தவிர்த்துவிட்டு மீதமுள்ள மூன்றூ பெயர்களை மட்டும் எடுத்துக் கொள்ளலாம் என்று ராகுல் காந்தி பேசினார்.
தொடர்ந்து, அதானி, அம்பானி பெயர்களை ராகுல் காந்தி குறிப்பிட்டு பேசியதற்கு பாஜக எம்பிக்கள் கூச்சலிட்ட நிலையில், ஏ1, ஏ2 எனக் குறிப்பிட்டு இருவரையும் ராகுல் விமர்சித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.