
புது தில்லி: பாஜக வைத்திருக்கும் சக்கர வீயுகத்துக்குள் ஆறு பேர் மட்டுமே போக முடியும். கோயிலின் கருவறைக்குள் கூட அனைவரும் போக முடியும், ஆனால், பாஜக சக்கரவியூகத்துக்குள் வேறு யாரும் நுழைய முடியாது என்றார் ராகுல் காந்தி.
மக்களவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாட்டின் பல்வேறு அடிப்படை மற்றும் முக்கிய விஷயங்கள் குறித்து பேசினார்.
அப்போது அவர் பேசும்போது, அம்பானி, அதானிக்கு ஒதுக்கப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து பட்டியலிட்டார். அதற்கு, அம்பானி, அதானி பெயர்களைக் குறிப்பிடக்கூடாது என்று அவைத் தலைவர் கூறியதால், ஏ1 என அம்பானியையும் ஏ2 என அதானியையும் குறிப்பிட்டு கிண்டலாகப் பேசினார் ராகுல் காந்தி.
தொடர்ந்து அவர் பேசுகையில், சாதிவாரி கணக்கெடுப்பே மக்களின் விருப்பம், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என 95 சதவீத மக்கள் விரும்புகிறார்கள். காங்கிர ஆட்சியல் செயல்படுத்திய திட்டங்களை சக்கரவியூகத்தின் மூலம் பாஜக நசுக்குகிறது. கோயிலின் கருவறைக்குள் கூட அனைவரும் நுழைந்துவிட முடியும். ஆனால், பாஜகவின் சக்கரவியூகத்துக்குள் ஆறு பேர் மட்டுமே நுழைய முடியும். நாட்டில் தற்போது அச்சமான சூழல் நிலவுகிறது. பாஜகவின் சக்கரவியூகத்தை எதிர்க்கட்சிகள் உடைத்துவிடும்.
குருக்சேத்திர போரில், அபிமன்யு என்ற இளைஞர், சக்கரவியூகத்தின் மூலம் ஆறு பேரால் கொலை செய்யப்பட்டார், சக்கரவியூகம் என்பது வன்முறை மற்றும் அச்சத்துக்குரியது, அப்போது அபிமன்யுவுக்கு என்ன நேர்ந்ததோ, தற்போது பாஜக உருவாக்கியிருக்கும் சக்கர வியூகத்தின் மூலம் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் சிறுகுறு தொழிலாளர்களுக்கும் அதுவே நிகழ்கிறது என்றார் ராகுல்.
மேலும் அவர் பேசுகையில், பட்ஜெட் திட்டமிடலில் ஓபிசி இனத்தவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
ரயில்வே மற்றும் விமானப் போக்குவரத்து தொடர்பான இரண்டு பெரிய ஒப்பந்தங்கள், ஏ1 மற்றும் ஏ2 வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது ரயில்வேயும் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களிடம் சென்றுகொண்டிருக்கிறது என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.