
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
மத்தியப் பிரதேசத்தின் கசர் கிராமத்தில் 3 வயதேயான ஷௌமியா என்ற சிறுமி, விவசாய நிலத்தில் நேற்று மாலையில் (ஜூலை 29) விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக, அருகில் இருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.
இதனையடுத்து, குழந்தை 250 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து விட்டதாக மீட்புப்படைக் குழுவினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற மீட்புக் குழுவினர், குழந்தை 25ஆவது அடி ஆழத்தில் சிக்கியிருப்பதைக் கண்டறிந்து, குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் ஐந்தரை மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு, குழந்தையை கிணற்றில் இருந்து வெளியில் மீட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, குழந்தையின் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இருப்பினும், குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.