ஓடும் பேருந்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த டிரைவர்!
தெலங்கானாவில் ஓடும் பேருந்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த டிரைவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தெலங்கானாவின் நிர்மல் மாவட்டத்தில் இருந்து ஆந்திரத்தின் பிரகாசம் மாவட்டத்திற்கு சென்ற தனியார் பேருந்தில் பெண் ஒருவர் நேற்று (ஜூலை 29) பயணம் செய்துள்ளார். இந்நிலையில், நள்ளிரவில் பேருந்து ஓட்டுநர்களில் ஒருவர், அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அந்த பெண் காவல்துறையின் 'டயல் 100'-ஐ அழைத்துப் புகாரளித்துள்ளார். இதனையடுத்து தகவல் அறிந்த காவல்துறையினர், மெட்டுகுடா பகுதிக்கு அருகே பேருந்து சென்றபோது, வழிமறித்து, பேருந்தைத் தடுத்தி, நிறுத்தியுள்ளனர்.
இருந்தபோதிலும், பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இருப்பினும், பேருந்தை ஓட்டிவந்த மற்றொரு ஓட்டுநரை, காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேருந்தில் பயணிகள் இருந்தபோதிலும், தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு விட்டதாக, அந்த பெண் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்; பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.