

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் இரு பயங்கரவாதிகள் ஊடுருவியதாகக் கிடைத்தத் தகவலின் பேரில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
சலம்புரா கிராமத்தில் கருப்பு உடையணிந்த இரு நபர்கள் ஆயுதங்களுடன் வலம் வரும் தகவல் கிடைத்தாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, தகவல் கிடைத்தவுடன் ராஷ்டிரிய ரைஃபில்ஸ் மற்றும் சிஆர்பிஎஃப் வழிகாட்டுதலின் பேரில் காவல்துறையினருடன் இணைந்து நேற்று (ஜூலை 29) முதல் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகள் பங்காய் பகுதிக்கு நகர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனால், தற்போது வரை தேடுதலில் அவர்கள் இருக்கும் சரியான இடம் குறித்தத் தகவல்கள் தெரியவில்லை என கூறப்படுகிறது.
சுற்றியுள்ள வனப்பகுதிகள் மற்றும் கிராமங்களில் பாதுகாப்புப் படையினர் தீவிரத் தேடுதலில் இறங்கியுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.