
புதுதில்லியில் ஒரு மணி நேரத்தில் 100 மில்லி மீட்டருக்கும் மேல் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
புதன்கிழமை(ஜூலை 31) இரவு வரை மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மாலை ஒரு மணி நேரத்தில் 112.5 மி.மீ. மேல் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. மேகவெடிப்பால் குறுகிய நேரத்தில் மிக கனமழை பெய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தலைநகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையத்திலும், நாடாளுமன்ற வளாகத்தினுள்ளும் மழைநீர் புகுந்து பாதிப்பை ஏர்படுத்தியுள்ளது. இதையடுத்து தில்லி விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 10 விமானங்கள் லக்னௌ விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, மக்கள் வீடுகளைவிட்டு தேவையின்றி வெளியே வர வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.