கர்நாடகத்தில் பாஜக - மஜத உறவில் விரிசல்? நடைப்பயணத்தில் பங்கேற்கப் போவதில்லை -குமாரசாமி

கர்நாடகத்தில் பாஜக நடைப்பயணத்தில் மஜத பங்கேற்கப் போவதில்லை -மத்திய அமைச்சர் குமாரசாமி
மத்திய அமைச்சர் ஹெச். டி. குமாரசாமி
மத்திய அமைச்சர் ஹெச். டி. குமாரசாமி
Published on
Updated on
1 min read

கர்நாடகத்தில் பாஜக - மஜத உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கர்நாடகத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில், மைசூரு நகர வளா்ச்சிக் கழகம் மாற்று வீட்டுமனைகள் ஒதுக்கியதில் முறைகேடு செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது பாஜக.

வீட்டுமனை ஒதுக்கீட்டில் ரூ. 4,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் முதல்வா் சித்தராமையா ராஜிநாமா செய்யக் கோரி ஆகஸ்ட் 3-ஆம் தேதி தொடங்கி 7 நாள்கள் நடைப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

இதையடுத்து, பெங்களூரு, கெங்கேரியில் ஆக. 3ஆம் தேதி காலை 8.30 மணிக்கு தொடங்கும் நடைப்பயணத்தில் 224 சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் தினந்தோறும் கலந்துகொள்வாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைப்பயணத்தை முன்னாள் முதல்வா் எடியூரப்பா தொடங்கி வைக்கிறாா், மத்திய அமைச்சா் ஹெச்.டி.குமாரசாமி கலந்துகொள்கிறாா் என்று கடந்த சில நாள்களுக்கு முன், பெங்களூரில் பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா தலைமையில் பாஜக - மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவையில் கனரக தொழில்கள் மற்றும் எஃகு துறை அமைச்சராக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் ஹெச்.டி. குமாரசாமி, தற்போதைய அரசியல் சூழலில் இந்த நடைப்பயணம் அவசியம்தானா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது பாஜக வட்டாரத்தில் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

பாஜக தலைவர்கள் ஹெச்.டி. குமாரசாமியிடன் மரியாதையுடன் நடந்துகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டைமுன்வைக்கும் குமாராசாமியின் ஆதரவாளர்கள், இதனால் அவருக்கு மனவருத்தம் உண்டாகியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இதன்காரணமாக, கர்நாடகத்தில் பாஜக - மஜத இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

“இப்போதைய சூழலில் பாஜக மேற்கொள்ளவுள்ள நடைப்பயணத்தில் பங்கேற்றால் மக்கள் எங்களிடம்தான் கேள்வி கேட்பார்கள். ஆகவே இந்த நடைப்பயணத்திற்கு மஜத எந்த விதத்திலும் ஆதரவளிக்கப்போவதில்லை. மாற்று நில முறைகேடு விவகாரத்தில் சட்டப்போராட்டம் நடத்துவதே சரியான தீர்வாக அமையும்” என்று குமாரசாமி குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com