யுபிஎஸ்சி தலைவராக ப்ரீத்தி சுதன் நியமனம்!

யுபிஎஸ்சி தலைவராக இருந்த மனோஜ் சோனி கடந்த வாரம் ராஜிநாமா.
Preeti sudan
ப்ரீத்தி சுதன்Facebook
Published on
Updated on
1 min read

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய (யுபிஎஸ்சி) தலைவராக ஐஏஎஸ் அதிகாரி ப்ரீத்தி சுதனை நியமித்து மத்திய அரசு புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

யுபிஎஸ்சி தலைவராக இருந்த மனோஜ் சோனியின் பதவிக்காலம் முடிய ஐந்தாண்டுகள் இருந்த நிலையில், திடீரென சில நாள்களுக்கு முன் ராஜிநாமா செய்தார்.

இந்நிலையில், அவரது ராஜிநாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும், யுபிஎஸ்சி தேர்வுக் குழு உறுப்பினராக இருக்கும் ப்ரீத்தி சுதனை அடுத்த தலைவராக நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

UPSC
மத்திய அரசு அறிவிப்புUPSC

மேலும், நாளை(ஆகஸ்ட் 1) முதல் மறு உத்தரவு வரும் வரை அல்லது ஜூன் 29, 2025 வரை யுபிஎஸ்சி தலைவராக ப்ரீத்தி சுதன் பதவி வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1983ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான ப்ரீத்தி சுதன், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குழு உறுப்பினராக பதவி வகித்து வந்த இவர், மத்திய சுகாதாரத்துறை செயலாளராகவும், பாதுகாப்புத் துறை இணை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

Preeti sudan
பூஜா கேத்கர் முன்ஜாமீன் கோரி மனு: விசாரணை ஒத்திவைப்பு

பூஜா கேத்கர் உள்பட குடிமைப் பணித் தேர்வுகளில் முறைகேடாக தேர்ச்சி பெற்றுப் பணியிலிருப்பவர்கள் தொடர்பாக அண்மைக்காலமாக சர்ச்சைகள் பெருகிய நிலையில், மனோஜ் சோனி ராஜிநாமா செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com