
நாடாளுமன்றத்தின் 543 மக்களவைத் தொகுதிகளுக்கும் நடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெல்லப்போவது யார்? என்பதை முன்கூட்டியே கணிக்கும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன.
அதில் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே பெரும்பாலான இடங்களை கைப்பற்றுவதாக தெரிவிக்கின்றன.
சி.என்.என். நியூஸ்18 டி.வி. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 229 இடங்களில் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில்,
பாஜக கூட்டணி 116-126,
காங்கிரஸ் கூட்டணி 87-92,
பிற கட்சிகள் 17-22 ல் வெல்ல வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகம் - 39 இடங்கள்
திமுக+இந்தியா கூட்டணி 36-39,
அதிமுக 0-2
பாஜக கூட்டணி 1-3
இதர கட்சிகள் 0
கர்நாடகம் - 28 இடங்கள்
தேசிய ஜனநாயக கூட்டணி 23-28
காங்கிரஸ் 3-7
இதர கட்சிகள்-0
கேரளம்- 20 இடங்கள்
பாஜக கூட்டணி 1-3
ஐக்கிய ஜனநாயக முன்னணி 15-18
இடதுசாரி ஜனநாயக முன்னணி 2-5
இதர கட்சிகள்-0
ஆந்திரம் - 25 இடங்கள்
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 5-8
தேசிய ஜனநாயக கூட்டணி 19-22
இந்தியா கூட்டணி 0
இதர கட்சிகள்-0
தெலங்கானா - 17 இடங்கள்
பாரத இராஷ்டிர சமிதி 2-5
தேசிய ஜனநாயக கூட்டணி 7-10
இந்தியா கூட்டணி 5-8
இதர கட்சிகள்-0
பிகார் - 40 ல் 14 இடங்கள்
தேசிய ஜனநாயக கூட்டணி 10-13
இந்தியா கூட்டணி 3-6
உத்தரப்பிரதேசம் - 80 ல் 26 இடங்கள்
தேசிய ஜனநாயக கூட்டணி 22-25
இந்தியா கூட்டணி 3-6
பகுஜன் சமாஜ் 0
மகாராஷ்டிரம் - 48 இடங்கள்
தேசிய ஜனநாயக கூட்டணி 32-35
இந்தியா கூட்டணி 15-18
குஜராத் - 26 இடங்கள்
தேசிய ஜனநாயக கூட்டணி 26
இந்தியா கூட்டணி 0
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.