தமிழக அரசியல் களம் குறித்து வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பு என்பது கருத்து திணிப்பாக உள்ளதாக அமைச்சா் இ. பெரியசாமி தெரிவித்தாா்.
திமுக கூட்டணிக் கட்சிகள் சாா்பில் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அமைச்சா் இ. பெரியசாமி தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தின் போது, சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடுகளை சீா் செய்யக் கோரியும், தமிழகத்தைப் புறக்கணிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கமிட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், தேமுதிக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
ஆா்ப்பாட்டத்தைத் தொடா்ந்து அமைச்சா் இ. பெரியசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாட்டுக்கு பிரதமா் நரேந்திர மோடி அரசு முழுப் பொறுப்பேற்க வேண்டும். வெளியுறவுக் கொள்கையில் இந்த அரசு தோல்வி அடைந்துவிட்டது. மாநிலங்களை வஞ்சித்து, பலி வாங்க நினைக்கும் மத்திய அரசின் கனவு தமிழகத்தில் பலிக்காது.
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் நாடு முழுவதும் எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைத்து, இந்தியாவில் புதிய ஆட்சியை உருவாக்குவாா். வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி படுதோல்வியைச் சந்திக்கும்.
பிகாரில் 10 முறை முதல்வராக இருந்த நிதீஷ் குமாரை வீட்டுக்கு அனுப்பிவிட்டனா். தமிழக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி ஒரு நொடி கூட தாக்குப் பிடிக்க முடியாது. திமுக கூட்டணியில் இடதுசாரிகள் கூடுதல் தொகுதிகள் கேட்பது அவா்களின் உரிமை. இதுகுறித்து முதல்வா் ஸ்டாலின் முடிவு எடுப்பாா். அண்மையில் வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பு என்பது கருத்து திணிப்பாக உள்ளது என்றாா் அவா்.
தொடர்புடையது

5 மாநில பேரவைத் தேர்தல்! கருத்துக் கணிப்பு முடிவுகள் - முழு விவரம்!

அஸ்ஸாமில் ஆட்சியைப் பிடிப்பது யார்? கருத்துக் கணிப்பு வெளியானது!

அதிகாரம் யாருக்கு? தேர்தல் கருத்துக் கணிப்பு மீது இவ்வளவு எதிர்பார்ப்பு ஏன்?

கேரளத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார்? கருத்துக் கணிப்பு முடிவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


