திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

7-ம் கட்ட வாக்குப்பதிவு: மேற்கு வங்கத்தில் உச்சபட்ச வன்முறை

மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் மேற்கு வங்கத்தில் உச்சபட்ச வன்முறை நிகழ்ந்துள்ளது.

News image
Updated On :1 ஜூன் 2024, 7:29 am

DIN

கொல்கத்தா: இறுதி மற்றும் ஏழாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மேற்கு வங்கத்தில் உச்சபட்ச வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.

மேற்கு வங்கத்தின் குல்டாலி மற்றும் வடக்கு 24 பர்கனாஸ் தொகுதிகளுக்கு உள்பட்ட இரண்டு வாக்குச்சாவடிகளுக்குள் நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று, அங்கிருந்த வாக்குப்பெட்டிகளை தூக்கிச் சென்று அருகில் உள்ள குளத்தில் வீசியிருக்கிறது.

சில கட்சிகளின் ஏஜெண்டுகளை, வாக்குச்சாவடிக்குள் இருக்க காவல்துறையினர் அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து இந்த சம்பவம் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

குளத்தில் வீசப்பட்ட வாக்குச்சாவடி பொருள்கள்

குளத்தில் வீசப்பட்ட வாக்குச்சாவடி பொருள்கள்

மேலும், ஜாதவ்பூர் தொகுதிக்கு உள்பட்ட பங்குர் என்ற இடத்தில் உள்ள வாக்குச்சாவடியில் இருவேறு கட்சியினருக்கு இடையே நடந்த மோதலைக் கட்டுப்படுத்து, காவல்துறையினர் பொதுமக்கள் மீது தடியடி நடத்திக் கலைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

வன்முறையில் ஈடுபட்ட பொதுமக்களை காவல்துறையினர் விரட்டியடிக்கும் விடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியிருக்கிறது.

மக்களவைத் தேர்தலில் ஏழாவது மற்றும் இறுதிக்கட்டமாக பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி உள்பட 57 தொகுதிகளில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

மேற்கு வங்கத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் இன்று காலை வாக்குப்பதிவு நடைபெற்றது. வேறெங்கும் இல்லாத வகையில், பல வாக்குச்சாவடிகளில் வன்முறை வெடித்துள்ளது. ஒரு இளைருக்கு தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.