
உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் தனது வாக்கினைச் செலுத்தினார்.
மக்களவைத் தோ்தலில் ஏழாவது மற்றும் இறுதிக்கட்டமாக பிரதமா் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி உள்பட 57 தொகுதிகளில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. ஏழு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள இத்தொகுதிகளில் தோ்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாட்டின் பல பகுதிகளில் வெயில் வாட்டி வதைப்பதால், வாக்குச் சாவடிகளில் சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இன்று தேர்தல் நடைபெறும் நிலையில், பிரதமர் மோடி விவேகானந்தர் மண்டபத்தில் 45 மணி நேர தியானத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.