
சிக்கிம் மாநில வளர்ச்சிக்காக மாநில அரசுடன் இணைந்து பணியாற்ற ஆர்டமுடன் எதிர்நோக்கி உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
முதல்வர் பிரேம் சிங் தமாங் தலைமையிலான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி 32 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் 31 இடங்களை வென்று வரலாறு படைத்து சிக்கிமில் இரண்டாவது முறையாக ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.
சிக்கிம் மாநிலத்தில் லாச்சென் மங்கன் தவிர்த்து 31 இடங்களில் பாஜக களம் கண்டது. இவை அனைத்திலும் பாஜக தோல்வியைத் தழுவியது. இந்தத் தேர்தலில் 5.18% வாக்குகளை மட்டுமே பாஜக பெற்றது.
31 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பன்மையுடன் மீண்டும் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி ஆட்சி அமைக்கவுள்ளது. பிரேம் சிங் தமாங் மீண்டும் முதல்வராகலாம் எனத் தெரிகிறது.
இந்நிலையில், சிக்கிம் மாநில தேர்தலில் அக்கட்சியின் வெற்றி குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, சிக்கிம் மாநிலத்தில் பாஜகவுக்காக வாக்களித்த மக்களுக்கு நன்றி. கட்சித் நிர்வாகிகளின் முயற்சி, உழைப்புக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். சிக்கிம் மாநில வளர்ச்சிக்காகவும், மக்கள் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காகவும் தங்கள் கட்சி எப்போதும் முன்னிலையில் நிற்கும்.
2024 சிக்கிம் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா மற்றும் முதல்வர் பிரேம்சிங் தமாங்கிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். வரும் நாள்களில் சிக்கிம் மாநில வளர்ச்சிக்காக மாநில அரசுடன் இணைந்து பணியாற்ற ஆர்டமுடன் எதிர்நோக்கி உள்ளேன் என மோடி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற மற்றொரு மாநிலமான, அருணாச்சலப் பிரதேசத்தில், பாஜக அமோக வெற்றி பெற்று மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.