புணே கார் விபத்து சம்பவம்: 12க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைப்பு

புணே கார் விபத்து சம்பவம்: 12க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைப்பு

புணே கார் விபத்து சம்பவம் தொடர்பாக 12க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
Published on

புணே கார் விபத்து சம்பவம் தொடர்பாக 12க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புணேயில் கடந்த மே 19-ஆம் தேதி 17 வயது சிறுவன் அதிவேகமாக ஓட்டிச் சென்ற கார் மோதி இரு தகவல் தொழில்நுட்ப (ஐடி) பணியாளர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அஸ்வினி கோஸ்தா (24) மற்றும் அனீஷ் அவாதியா (24) என்று விசாரணையில் தெரியவந்தது.

கார் ஓட்டிய சிறுவன் மதுபோதையில் இருந்ததாக அப்பகுதி போலீஸôர் தெரிவித்தனர். இதையடுத்து, சிறுவன் கைது செய்யப்பட்டு ஜூன் 5-ஆம் தேதி வரை கூர்நோக்கு இல்லத்தில் அடைத்து வைக்கப்பட்டார்.

இந்நிலையில், சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றிய குற்றச்சாட்டில் அரசு மருத்துவர்கள் இருவர் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக சிறார் கூர்நோக்கு இல்லத்தில், சிறுவனின் பெற்றோர் மத்தியில் ரத்த மாதிரி மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் சிறுவனிடம் விசாரணை நடத்தினர். அப்போது மாற்றப்பட்ட ரத்த மாதிரி சிறுவனின் தாயார் உடையது என கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவரை காவல்துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.

இந்த வழக்கில் தங்களது குடும்ப கார் ஓட்டுநரை சட்டவிரோதமாக அடைத்துவைத்து குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு வற்புறுத்திய குற்றச்சாட்டில் சிறுவனின் தந்தை மற்றும் தாத்தா ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புணே கார் விபத்து சம்பவம்: 12க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைப்பு
அருணாச்சல்: 10 பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு!

இந்த நிலையில், புணே கார் விபத்தில் சம்பவத்தில், விரிவான விசாரணை நடத்தி பல்வேறு காரணங்களை கண்டறிய 100 பேர் கொண்ட 12க்கு மேற்பட்ட குழுக்களை காவல் துறையினர் அமைத்துள்ளனர்.

பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளை விசாரிக்க 8 முதல்10 பேர் கொண்ட 3 குழக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கை வலுப்படுத்த ஆவணப்படுத்தும் பணிக்காக 2 குழுக்கள், சிசிடிவி காட்சிகளை கண்காணிப்பதற்கு ஒரு குழு, கள நடவடிக்கைகள் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுக்கு 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்களை அழைத்துச் செல்வதற்கு ஒரு குழுவும், தகவல் பரிமாற்றத்துக்கு ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com