பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

25 தொகுதிகளின் இடைத்தேர்தல்: நிலவரம் என்ன?

இடைத்தேர்தல் நடைபெற்ற 25 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக அதிக இடங்களில் முன்னிலை

News image
Updated On :4 ஜூன் 2024, 7:00 am

DIN

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவரும் நிலையில், 25 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.

பிகார் மாநிலம் அஜியான் தொகுதியில், இடதுசாரி முன்னிலை பெற்றுள்ளது.

குஜராத் மாநிலம் விஜபூர், போர்பந்தர், மனவதர், கம்பத், வகோதியா, ஆகிய சட்டப்பேரவைகளில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலையில் உள்ளது.

ஹரியாணாவின் கர்னல் தொகுதியில் பாரதிய ஜனதாவும்,

ஹிமாசலப் பிரதேசத்தின் கக்ரேட் தொகுதியில் கங்கிரஸ் கட்சியும் முன்னிலையில் உள்ளன.

ஹிமாசலப் பிரதேசத்தின் குத்லேஹர், தெலங்கானாவில் செகந்திராபாத் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது.

திரிபுராவின் ராம்நகர் தொகுதியில் பாஜக முன்னிலை.

உத்தரப் பிரதேசத்தின் தட்ரூல் தொகுதியில் பாஜகவின் அரவிந்த் குமார் சிங் முன்னிலையில் உள்ளார்.

தமிழ்நாட்டின் விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் முன்னிலையில் உள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் கிழக்கு லக்னெள, துத்தி ஆகிய தொகுதிகளில் பாஜவும்,

கெயின்சாரி தொகுதியில் சமாஜ்வாதியும் முன்னிலை பெற்றுள்ளது.

மேற்கு வங்கத்தின் பாகபங்கோலா தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.

இதே மாநிலத்தின் பாராநகர் தொகுதியில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.

25 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக இடங்களில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.