சநாதனத்துக்கு கிடைத்த வெற்றி: கங்கனா ரணாவத்!
மண்டி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்த கங்கனா ரணாவத்


ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் மண்டி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கங்கனா ரணாவத் அவரை எதிர்த்து போட்டியிட்ட விக்ரமாதித்ய சிங்கை காட்டிலும் 72,696 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
இதுகுறித்து கங்கனா ரணாவத், “மண்டி தொகுதி மக்கள் என் மீது வைத்த அன்புக்கும் நம்பிக்கைக்கும் நன்றி. இந்த வெற்றி மக்களுக்கானது. பிரதமர் மோடி மற்றும் பாஜகவை நம்பியவர்களுக்கு கிடைத்த வெற்றி. சனாதனத்துக்கு கிடைத்த வெற்றி” என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த கங்கனா, பிரதமர் மோடியின் பெயரால் தாங்கள் தேர்தலை எதிர்கொண்டதாகவும் அவர் வாக்குறுதி மற்றும் நம்பகத்தன்மை மீதான மக்களின் நம்பிக்கையால் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதி உள்பட 4 தொகுதிகளிலும் பாஜக கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...