கர்நாடகத்தில் பாஜக 16 தொகுதிகளிலும், காங்கிரஸ் 10 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
மக்களவைத் தோ்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) காலை 8 மணிக்குத் தொடங்கியது. 542 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
28 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட கார்நாடகத்தில், பாஜக 16 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 2 தொகுதிகளிலும், காங்கிரஸ் தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.
பெங்களூரில் பாஜக முன்னிலை
பெங்களூரு தெற்கு மற்றும் வடக்கு உள்ளிட்ட நான்கு தொகுதிகளில் மூன்றில் பாஜக முன்னிலை வகிக்கிறது, அதே நேரத்தில் பெங்களூருவில் காங்கிரஸ் வேட்பாளர் மன்சூர் அலிகான் பாஜகவின் பிசி மோகனை எதிர்த்து 63,218 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளது.
ஹசன் தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை
ஜேடி(எஸ்) வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா, காங்கிரஸ் வேட்பாளர் ஷ்ரேயாஸ் எம். படேலை விட 17,108 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.
கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, ஹாவேரியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆனந்தசாமி கடாதேவர்மத்தை எதிர்த்து முன்னிலையில் உள்ளார்.
மண்டியாவில் ஜேடி(எஸ்) தலைவர் குமாரசாமி முன்னிலையிலும், காங்கிரஸ் வேட்பாளர் வெங்கடரமண கௌடா 240,158 வாக்குகள் வித்தியாசத்திலும் பின்தங்கியுள்ளார்.
பல ஆண்டுகளாக பாஜக வலுவான செல்வாக்கை உருவாக்க முடிந்த ஒரே தென் மாநிலமாக கர்நாடகா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.