
மகாராஷ்டிரத்தில் 3 மக்களவைத் தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. சிவசேனை (உத்தவ் பிரிவு) 3 தொகுதிகளிலும், சிவசேனை (ஹிண்டே பிரிவு) தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. (இரவு 8 மணி நிலவரம்)
மகாராஷ்டிரத்தில் நாக்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரும் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சரும் நிதின் கட்காரி 136565 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் நீடிக்கிறார்.
மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் 3,53,004 வாக்குகள் வித்தியாசத்தில் முந்தியுள்ளார்.
பாரமதி தொகுதியில் போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சுப்ரியா சூலே 53,516 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அவருக்கு எதிராக போட்டியிட்ட அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பின்னடைவை சந்தித்துள்ளார்.
கல்யான் தொகுதியில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகனும் சிவசேனை தலைவருமான ஸ்ரீகாந்த் ஷிண்டே 2,39,505 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
ஒளரங்காபாத் மக்களவைத் தொகுதியில் அகில இந்திய மஜ்லீஸ் இத்தேஹாதுல் முசுலீமின் கட்சியின் வேட்பாளர் இம்தியாஸ் ஜலீல் 1,21,773 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார். சிவசேனையின் பி.எஸ். அஸ்ராம் முன்னிலையில் நீடிக்கிறார்.
அமராவதி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நவ்னீத் ரானா 18,135 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் பல்வந்த் வான்கடே முன்னிலையில் நீடிக்கிறார்.
(இரவு 8 மணி நிலவரம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.