
உத்திரப்பிரதேசத்தின் பான்ஸ்கான் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சதால் பிரசாத் 110 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் கமலேஷ் பஸ்வானிடம் தோல்வியடைந்ததாக இன்று மாலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
32 மற்றும் 33 வது சுற்று வாக்கு எண்ணிக்கை அறிவிப்பில் சந்தேகம் இருப்பதாக காங்கிரஸ் வேட்பாளர் கூறியதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினரும், கூட்டணி கட்சியான சமாஜ்வாதி கட்சியினரும் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தற்போது தேர்தல் ஆணையம் வாக்குகளை மறு எண்ணிக்கை செய்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.