
ஆந்திர மாநிலத்தின் 15வது சட்டப்பேரவையை அம்மாநில ஆளுநர் அப்துல் நஸீர் கலைத்தார்.
ஆந்திர முதல்வராக இருந்த ஜெகன்மோகன் ரெட்டி தனது பதவியை ராஜிநாமா செய்தார். அதற்கு முன்னதாக அமைச்சரவை உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தி ஆட்சியை கலைக்க முடிவு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து முதல்வர் பதவியை ஜெகன் மோகன் ரெட்டி ராஜிநாமா செய்வதாக அறிவித்தார். இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.
முதல்வரின் ராஜிநாமாவை ஏற்றுக்கொண்ட ஆளுநர், 15வது சட்டப்பேரவையை கலைப்பதாக அறிவித்துள்ளார்.
ஆந்திர சட்டப்பேரவைக்கு மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி 135 தொகுதிகளிலும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 21 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
ஜெகன்மோகன் ரெட்டியின் ஆளும் ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி 11 தொகுதிகளில் மட்டுமே வென்றது. பாஜக 8 இடங்களில் வெற்றி பெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.