
மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்களைப் பற்றிய தகவல்களில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்திலும், இதனை விடக் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறவே இனி முடியாது என்ற அளவிலும் ஒருவரின் புகழ் ஓங்கியிருக்கும். நல்லவேளை அது தவிர்க்கப்பட்டது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பை வட மேற்கு தொகுதியில் போட்டியிட்ட சிவசேனையின் இரு பிரிவு வேட்பாளர்களில் ஷிண்டே அணியைச் சேர்ந்த ரவீந்திர வாய்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அதாவது செவ்வாய்க்கிழமை மாலை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு, ஒரு வாக்கு வித்தியாசத்தில் வாய்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பிறகுதான், தபால் வாக்குகளையும் சேர்த்து 48 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
வாக்குப் பதிவு தொடங்கும் முன்பே தபால் வாக்குகள எண்ணப்பட்டுவிட்டன. அதில் 111 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. பிறகு வாக்கு வித்தியாசம் ஒரு வாக்கு என்று வந்ததால், தேர்தல் அதிகாரிகள் மீண்டும் தபால் வாக்குகளை எண்ணினர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அது மட்டுமல்ல, தபால் வாக்குகள் எண்ணப்படும் வரை வாய்கர் 1 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணைய இணையதளத்திலும் இருந்தது.
பிறகு இரவு 9 மணிக்குத்தான் 48 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு இணையதளத்திலும் பதிவேற்றப்பட்டது.
இது குறித்து வாய்கர் கூறுகையில், உத்தவ் அணி வேட்பாளர் கிருத்திகரிடம் நான் மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன். இவ்வளவு குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடையும்போது மிகந்த வருத்தம் ஏற்படும் என்று தெரிவித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.