தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர்களுடன் அக்கட்சியின் தலைவரும் மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜித் பவார் அவசர ஆலோசனை நடத்தவுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிர மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ்(அஜித் பவார்) 4-ல் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.
இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி 29 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார்) கட்சி 8 தொகுதிகளில் வென்றுள்ளது.
இந்த நிலையில், தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து அஜித் பவார் இன்று அவசர ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனையில் கட்சியின் அனைத்து அமைச்சர்களும், முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மத்தியில் பாஜக கூட்டணி தனித்து ஆட்சி அமைக்க முடியாததற்கு உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம் மாநிலங்களில் ஏற்பட்ட தோல்வி முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.