பகுஜன் சமாஜ் தனித்துப் போட்டியிடாவிட்டால்... உ.பி.யில் மேலும் 16 இடங்களில் பா.ஜ.க. அணி தோற்றிருக்கும்!

பாஜகவின் வெற்றி எண்ணிக்கை 216-ஆக குறைந்திருக்கும்...
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி
Published on
Updated on
1 min read

உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை என்றாலும், 16 தொகுதிகளில் வெற்றி வித்தியாசத்தைவிட அதிக வாக்குகளை பெற்றுள்ளது.

பகுஜன் சமாஜ் தனித்துப் போட்டியிடாமல், இந்தியா கூட்டணியில் இணைந்திருந்தால் அந்த 16 தொகுதிகளிலும் பாஜக கூட்டணியின் வெற்றி கேள்விக்குறியாகி இருக்கும்.

இந்தியா கூட்டணியில் பகுஜன் சமாஜ் இடம்பெற்றிருந்தால், அனைத்து வாக்குகளும் அந்த கூட்டணிக்கு செல்லும் என்று உறுதியாக கூறமுடியாது என்றாலும், வெற்றி வாய்ப்பு அதிகரித்திருக்கும்.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில், இந்தியா கூட்டணியின் சமாஜ்வாதி 37, காங்கிரஸ் 6 தொகுதிகள் என மொத்தம் 43 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாஜக 33, ராஷ்ட்ரீய லோக் தளம் 2, அப்னா தளம்(சோனிலால்) ஒரு தொகுதியிலும், தனித்துப் போட்டியிட்ட ஆசாத் சமாஜ்(கன்ஷி ராம்) கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன.

இந்த நிலையில், பாஜக போட்டியிட்ட 14 தொகுதிகள், கூட்டணிக் கட்சிகளான ராஷ்ட்ரீய ஜனதா மற்றும் அப்னா தளம் ஆகியவை போட்டியிட்ட 2 தொகுதிகள் என மொத்தம் 16 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி பெருவாரியான வாக்குகளை பெற்றுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி
வரலாற்றில் முதல்முறை! 7 இடங்களில் அதிமுக டெபாசிட் இழப்பு!

உதாரணமாக, பதோஹி தொகுதியில் இந்தியா கூட்டணியில் போட்டியிட்ட திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் லலிதேஷ்பதி திரிபாதி 4.15 லட்சம் வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார்.

இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் வினோத் குமார் 4.59 லட்சம் வாக்குகள் பெற்று, 44,072 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். பகுஜன் சமாஜ் வேட்பாளர் 1.55 லட்சம் வாக்குகள் பெற்றிருந்தார். ஒருவேளை பகுஜன் சமாஜ் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருந்தால் பாஜக தோல்வி அடைந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும்.

அதேபோல், புல்பூர் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளரைவிட வெறும் 4,332 வாக்கு வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில், பகுஜன் சமாஜ் 82,586 வாக்குகள் பெற்றுள்ளது.

ஒருவேளை இந்தியா கூட்டணியில் பகுஜன் சமாஜ் இடம்பெற்றிருந்தால், உத்தரப் பிரதேசத்தில் மேலும் 16 தொகுதிகளில் பாஜக கூட்டணி இழந்திருக்கும்.

பாஜக வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை 226-ஆக குறைந்து, ஆட்சி அமைப்பதற்கு மேலும் சிக்கல் ஏற்பட்டிருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com