
சண்டீகர் விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை காவலர் தன்னை அறைந்ததாக கங்கனா ரணாவத் புகார் அளித்துள்ளார்.
பாலிவுட் நடிகையும், இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியின் பாஜக எம்.பி.யுமான கங்கனா ரணாவத் தில்லி செல்வதற்காக, சண்டீகர் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைக்கு பிறகு, விமானத்தில் ஏறுமிடத்தில் சிஐஎஸ்எஃப் காவலர் குல்விந்தர் கவுர் தன்னை அறைந்ததாகக் கூறி, தில்லி வந்தடைந்த கங்கனா சிஐஎஸ்எஃப் இயக்குநர் ஜெனரல் நினா சிங்கிடம் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து, சிஐஎஸ்எஃப் காவலர் குல்விந்தர் கவுர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
விவசாயிகளின் போராட்டம் குறித்து கங்கனா முன்பு கூறிய கருத்துக்களால் குல்விந்தர் கவுர் அதிருப்தி அடைந்திருந்ததால், அவர் கங்கனா ரணாவத்தை அறைந்ததாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.