பங்குச்சந்தை மோசடி! நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும்: ராகுல்

பங்குச் சந்தையில் ரூ.38 லட்சம் கோடி இழப்பு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை செய்யவேண்டும் எனக் கோரிய ராகுல் காந்தி
பங்குச்சந்தை மோசடி! நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும்: ராகுல்
படம் | பிடிஐ
Published on
Updated on
2 min read

புது தில்லி: பங்குச் சந்தையில் ரூ.38 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதன் பின்னணியில் செயல்பட்டவர்கள் மீது நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கோரிக்கை வைத்துள்ளார்.

புது தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி வாக்குக் கணிப்பின்போது பங்குச் சந்தையில் திடீர் உயர்வும் பின்னர் தேர்தல் முடிவுகளின் போதான சரிவும் ஏற்பட்டது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து பேசிய ராகுல் காந்தி, “பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா 5 கோடி குடும்பங்களுக்கு குறிப்பிட்ட முதலீட்டு ஆலோசனை ஏன் வழங்கினர்? பங்குச் சந்தை முதலீட்டு ஆலோசனை வழங்குவது அவர்களின் வேலையா? இரண்டாவது, அவர்கள் இருவரும் ஒரே செய்தி ஊடகத்திற்கு நேர்காணல் அளித்தது ஏன்? அந்த செய்தி ஊடகம் செபியால் பங்குச் சந்தையில் மோசடி செய்யப்பட்டதாக விசாரிக்கப்படும் அதே தொழில் குழுமத்தைச் சேர்ந்தது. மூன்றாவது, பாஜகவுக்கும் தேர்தலுக்கு பிந்தைய வாக்குக் கணிப்பு வெளியிட்ட நிறுவனங்களுக்கும் சந்தேகத்துக்குரிய வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் என்ன தொடர்பு” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

படம் | பிடிஐ

மேலும், வாக்குக் கணிப்பு வெளியானதற்கு பிறகு பங்குச் சந்தை 3.39 சதவீதம் உயர்வுகண்டன. அதேவேளையில், தேர்தல் முடிவுகள் வெளியானதும் பங்குச் சந்தைகள் 6 சதவீதம் சரிவு கண்டன. இதனால், பங்குச் சந்தையில் ரூ.38 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

மேலும், சிலர் பணம் சம்பாதிக்க பிரதமரும் உள்துறை அமைச்சரும் உதவியிருக்கிறாக்ரள். பங்குச் சந்தை உயர்வு குறித்து ஏன் மோடி வெளிப்படையாக பேச வேண்டும். பாஜகவினருக்கு பங்குச் சந்தை குறித்து முன்கூட்டியே தெரிந்திருக்கிறது. பங்குச் சந்தையில் லாபம் ஈட்ட கருத்துக் கணிப்பை திணித்துள்ளனர் என ராகுல் காந்தி பேசியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் ஜூன் 4 அன்று பங்குச் சந்தை உயரும் என்றும், நீங்கள் அனைவரும் முதலீடு செய்ய வேண்டும் என்றார், இதேபோல நிதி அமைச்சரும் கூறினார்.

ஜூன் 4 முன்னர் பங்குகளை வாங்குங்கள் என்று அமித் ஷா தெரிவித்தார். பிரதமர் மோடி மே 19 அன்று, ஜூன் 4-ல் பங்குச் சந்தை சாதனைகளை முறியடிக்கும் என்றார்.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புக்கும் வெளிநாட்டு முதலீடுகளுக்கும் இடையே தொடர்பு உஎள்ளது. அது குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும். போலியான கருத்துக் கணிப்புகளை நடத்தியவர்களை விசாரிக்க வேண்டும். பொறுப்புள்ள இடத்தில் அமர்ந்துகொண்டு போலியான கணக்கைக் காட்டியுள்ளனர்.

மோடி, அமித் ஷாவின் பேச்சால், பங்குச் சந்தையில் அதிக முதலீடு நடந்துள்ளது. வாக்குக் கணிப்பு வெளியானதற்கு மறுநாள், பங்குச் சந்தைகள் 3.39 சதவீதம் உயர்ந்தன. பங்குச் சந்தைகளில் ஊழல் நடந்திருக்கிறது என்று ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.

பங்குச்சந்தை மோசடி! நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும்: ராகுல்
பாரதிய ஜனதாவுக்கு இடமில்லாத மாநிலங்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com