கோட்டாவில் மற்றுமொரு நீட் மாணவி தற்கொலை!

கோட்டாவில் 18 வயது நீட் மாணவி தற்கொலை: மாடியில் இருந்து குதித்து உயிரிழப்பு
கோட்டாவில் மற்றுமொரு நீட் மாணவி தற்கொலை!
Published on
Updated on
1 min read

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் 18 வயது நீட் மாணவி ஒன்பதாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து உயிரிழந்ததாக வியாழக்கிழமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த மாணவி பகிஷா திவாரி மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அடுக்கு மாடிக் குடியிருப்பில் தாயார் மற்றும் சகோதரர் உடன் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஜூன் 4-ம் தேதி நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு (நீட்) முடிவுகள் வெளியான நிலையில் மாணவி இந்த முறையும் தேர்ச்சி பெறாததால் இந்த முடிவு எடுத்ததாக காவலர்கள் தெரிவிக்கின்றனர்.

மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட போதும் காயங்களால் அவர் உயிரிழந்துள்ளார்.

கோட்டாவில் நீட் பயிற்சி பெற்று வந்த மாணவியின் தந்தை வினோத் திவாரி பொதுபணித்துறையில் பொறியாளராக பணியாற்றுகிறார்.

புதன்கிழமை இரவு கோட்டாவுக்கு அவர் மகளை காண வந்தவர், பகிஷா 720-க்கு 320 மதிப்பெண்கள் பெற்றதாகவும் இந்த முறை இல்லையெனினும் தான் தனியார் மருத்துவ கல்லூரியில் இடம்வாங்கி தருவதாக தெரிவித்ததாகவும் மகள் இன்னொரு முறை முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இருந்தபோதும் ஏன் மகள் இந்த முடிவுக்கு சென்றார் என்பது குறித்து தெரியவில்லை என அவர் கூறியுள்ளார்.

மாணவி மாடியில் இருந்து குதிக்கும் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இவரோடு சேர்த்து இந்தாண்டில் மட்டும் இதுவரை கோட்டா நகரில் 10 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். கடந்த ஆண்டு 26 பயிற்சி மாணவர்கள் இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050]

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com