
உத்தரப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் வெற்றி பெற்றதையடுத்து, சமாஜவாதி கட்சித் தலைமைக்கு, காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.
உ.பி.யில் மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி 43 இடங்களில் வெற்றி பெற்றது; ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெறும் 36 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், அவரது மனைவி டிம்பிள் யாதவ், சமாஜவாதி மாநிலங்களவை உறுப்பினர் ராம்கோபால் யாதவ் ஆகியோருக்கு பிரியங்கா காந்தி நன்றி தெரிவித்து, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரியங்கா காந்தி எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது, “சமாஜவாதி கட்சியின் அனைத்து கடின உழைப்பாளிகளுக்கும் நன்றி. கடினமான சூழ்நிலைகளிலும் நாம் அனைவரும் இணைந்து ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க போரை நடத்தினோம். காங்கிரஸ் மற்றும் சமாஜவாதி கட்சிகளின் தொண்டர்கள் மக்களின் பிரச்சினைகள், சமூக நீதி மற்றும் அரசியலமைப்புச் சட்டத்திற்காக தைரியமாக குரல் எழுப்பினோம். அடக்குமுறைகள் இருந்தபோதிலும், கட்சித் தொண்டர்கள் ஒன்றிணைந்து ஜனநாயகத்தின் காவலர்களாக மாறி ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நின்றனர். உங்கள் அனைவரின் கடின உழைப்பின் காரணமாக, நம்முடைய அர்ப்பணிப்பு மீது மக்கள் நம்பிக்கை காட்டியுள்ளனர்" என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.