'அந்த பயம் இருக்கணும்'! - விஜய் பட வசனத்துடன் மோடியை விமர்சித்த கேரள காங்கிரஸ்!

அரசியல் சாசனத்தை மோடி வணங்குவதை விஜய்யின் துப்பாக்கி பட வசனத்துடன் கேரள காங்கிரஸ் விமர்சித்துள்ளது பற்றி...
'அந்த பயம் இருக்கணும்'! - விஜய் பட வசனத்துடன் மோடியை விமர்சித்த கேரள காங்கிரஸ்!
Published on
Updated on
1 min read

தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்திற்கு முன்னதாக அரசியல் சாசனத்தைப் பிரதமர் மோடி தொட்டு வணங்கியதைக் கேலியாக விமர்சித்திருக்கிறது கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் பக்கம்.

இந்தப் பதிவில் நடிகர் விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் இடம் பெறும் ”அந்த பயம் இருக்கணும்” என்ற வசனத்தை அப்படியே எழுதிப் பகிர்ந்துள்ளனர்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் புதிதாக எம்.பி.க்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கூட்டம் பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு முன்பு இந்திய அரசியல் சாசனத்தை பிரதமர் மோடி தொட்டுத் தலைவணங்கினார்.

ஏற்கெனவே, தேர்தல் பிரசாரத்தில் 400-க்கும் மேற்பட்ட இடங்களைப் பெறுவோம் என்று மோடி, அமித் ஷா உள்பட பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் பிரசாரம் செய்ய, அரசியல் சாசனத்தை, அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றிவிடுவார்கள் என்று ராகுல் காந்தி உள்பட இந்தியா கூட்டணித் தலைவர்கள் எதிரொலித்தனர்.

இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்றக் குழுத் தலைவராக பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை ராஜ்நாத் முன்மொழிய, அமித் ஷா, நிதின் கட்கரி உள்ளிட்டோர் வழிமொழிய ஒருமித்த குரலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com