
நீட் மருத்துவ நுழைவுத்தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளை விசாரணை மூலம் தீர்க்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மோடி அரசை கடுமையாக சாட்டியுள்ளார்.
சமீபத்தில் இளநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில் ஒரே தேர்வு மையத்தை சேர்ந்த 6 பேர் உள்பட 67 மாணவர்களுக்கு தரவரிசையில் இடம்பெற்றுள்ளனர்.
ஆனால், தேசிய தேர்வு முகவை இந்த முறைகேடுகளை மறுத்துள்ளது. என்சிஇஆர்டி பாடப்புத்தகங்களில் செய்யப்பட்ட மாற்றங்கள் மற்றும் தேர்வு மையங்களில் நேரத்தை செலவிட்டதற்கான கருணை மதிப்பெண் உள்ளிட்ட காரணங்களுக்காக மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றதற்கு காரணங்கள் என்றும் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பிரியங்க தனது எக்ஸ் பதிவில், முதலில் நீட் தேர்வுத்தாள் கசிந்தது, இப்போது அதன் முடிவுகளிலும் மோசடி நடைபெற்றுள்ளதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஒரே மையத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண்கள் எடுத்திருப்பது குறித்து கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டு பலவிதமான குளறுபடிகள் வெளிவருகின்றன.
தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு நாடு முழுவதும் பல மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது மிகவும் வருத்தமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது.
லட்சக்கணக்கான மாணவர்களின் குரலை அரசு புறக்கணிப்பது ஏன்? நீட் தேர்வு முடிவுகளில் நடந்த குளறுபடிகள் தொடர்பான நியாயமான கேள்விகளுக்கு மாணவர்களுக்கு பதிலளிக்க வேண்டும். விசாரணை நடத்தி சட்டப்பூர்வ புகார்களை தீர்ப்பது அரசின் பொறுப்பு என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.