கேரளத்தில் தீ விபத்து: 4 பேர் பலி !

கேரளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் பலி
கோப்புப் படம்
கோப்புப் படம்

கேரளத்தில் அங்காடிக்கடவு என்னும் ஊரில் தீ விபத்து ஏற்பட்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் உள்பட நான்கு பேர் உயிரிழந்து விட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்து குறித்து தீயணைப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரையில் நடந்த சோதனையின்படி தீயணைப்பு அதிகாரிகள் கூறுகையில், ”இன்று அதிகாலை 5.20 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக அழைப்பு வந்தது. தீயணைப்புக் குழுவினர் விபத்தினைக் கட்டுப்படுத்த விரைந்து சென்றபோதும், கட்டடத்தின் இரண்டாவது மாடியில் விபத்து ஏற்பட்டிருந்தது. தீயணைப்புக் குழுவினர், விபத்து ஏற்பட்ட வீட்டின் படுக்கையறைக்குள் தம்பதியர் மற்றும் இரு குழந்தைகளின் உடல்களைக் கண்டுள்ளனர். படுக்கையறை மற்றும் அருகிலுள்ள அறையிலும் தீப்பிடித்திருந்தது. தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனத் தெரிய வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com